- Advertisement -
Homeபொழுதுபோக்குஅம்பிகா - ராதா பிரச்னையை தீர்த்து வைக்க கேப்டன் இல்லே - ஆனா அந்த 2...

அம்பிகா – ராதா பிரச்னையை தீர்த்து வைக்க கேப்டன் இல்லே – ஆனா அந்த 2 உச்ச நட்சத்திரங்கள் என்ன பண்றாங்க? – ரசிகர்கள் கேள்வி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1980களில் முன்னணி நட்சத்திர நாயகிகளாக வலம் வந்தவர்கள் அம்பிகா மற்றும் ராதா. கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவில் நடிக்க வந்த உடன் பிறந்த சகோதரிகள். இருவருமே அழகில் நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்ததால் ஏராளமான படங்களில் நடித்தனர்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என பிறமொழி படங்களிலும் அம்பிகா ராதா கொடிகட்டிப் பறந்தனர். ராதாவுடன் யார் ஹீரோவாக நடிப்பது என்று அந்த 1980 காலகட்டத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகர்கள் சிரஞ்சீவி பாலகிருஷ்ணா இடையே கடும் போட்டியே நடந்திருக்கிறது. அந்தளவுக்கு அவர்களின் இமேஜ் இருந்துள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலகட்டத்தில் ஏஆர்எஸ் கார்டன் என்ற 40 ஏக்கர் நிலத்தை வாங்கிய அம்பிகா ராதா இருவரும் எம்ஜிஆரையே அங்கு அமைக்கப்பட்ட ஸ்டுடியோவை திறப்பு விழா செய்ய வைத்தனர். இந்த நிலம் எம்ஜிஆர் மூலமாக அவர்களுக்கு வழங்கப்பட்டதாக ஒரு தகவல் உள்ளது. ஆனால் அது உண்மையில்லை என்று நடிகை அம்பிகா சமீபத்தில் கூட மறுத்திருக்கிறார்.

ஏஆர்எஸ் கார்டன் இப்போது ஆர்ஆர் கார்டன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்பிகா ராதா சரசம்மாள் என்ற ஏஆர்எஸ் அந்த பெயர் ராதா மற்றும் அவரது கணவர் ராஜசேகரன் நாயர் என்பதன் சுருக்கமாக ஆர்ஆர் என சுருக்கமாக மாற்றபப்ட்டுள்ளது. இது நடிகை அம்பிகாவின் கவனத்துக்கே வராமல் நடந்துள்ளதாகவும் அம்பிகா சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் கேப்டன் விஜயகாந்த் இருந்திருந்தால் இந்த பிரச்னை ஏற்படுவதற்கு முன்பே பேசி முடித்திருப்பார். இப்படி ஒரு பிரச்னையே எங்களுக்கு வந்திருக்காது. அதற்காக விஜயகாந்த் இப்போது இல்லையே என்று நான் அவரை ரொம்பவும் மிஸ் பண்றேன் என்றும் அம்பிகா ஆதங்கமாக கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

அம்பிகா, ராதா இருவருடனும் அதிக படங்களில் இணைந்து நடித்தவர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ரஜினியும், உலக நாயகனாக ராஜ்யசபா எம்பியாகவும் கமலும் உள்ளனர். ரஜினி கமல் இருவரும் சேர்ந்து அம்பிகா – ராதாவை இருவரையும் அழைத்து சில மணி நேரம் ஒதுக்கி அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையை சுமூகமாக தீர்த்து வைக்கலாமே? அவர்கள் நினைத்தால் அதை செய்ய முடியும். ரஜினி கமல் இணைந்து சொல்லும் போது ராதா அம்பிகா இருவரும் அவர்களது பேச்சுக்கு கட்டுப்படுவார்கள் என்று சினிமா விமர்சகர்கள் ஒரு கருத்தை தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்