ஆரம்பத்தில் துணை நடிகராக இருந்து பிறகு முன்னணி நட்சத்திர நடிகராக மாறியிருப்பவர் விஜய் சேதுபதி. வெண்ணிலா கபடிக்குழு புதுப்பேட்டை நான் மகான் அல்ல உள்ளிட்ட சில படங்களில் விஜய் சேதுபதி சில காட்சிகளில் வருவார். ஆனால் அது விஜய் சேதுபதி என்று அப்போது ரசிகர்களுக்கு தெரியாது.
இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக விஜய் சேதுபதி அறிமுகமானார். தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரம்மி பண்ணையாரும் பத்மினியும் சுந்தரபாண்டியன் சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்த பிறகுதான் விஜய் சேதுபதி பிரபல நடிகராக மாறினார்.
அதன்பிறகு நானும் ரவுடிதான் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தர்மதுரை என பல படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக மாறிவிட்டார். பேட்ட விக்ரம் மாஸ்டர் போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியிருந்தார். இப்போது 3வது ஆண்டாக விஜய் டிவியில் தொகுப்பாளராக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருக்கிறார்.
சமீபத்தில் லீடர்ன்னா என்ன லீடர்ஷிப்புன்னா என்னான்னு தெரியாமல் என்று விஜய் சேதுபதி பேசிய ஒரு கருத்து இணையத்தில் வைரலானது. விஜய் குறித்தும் தவெக குறித்தும் அவர் பேசியதாக ஒரு தகவல் பரவிய நிலையில் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. அதே நேரத்தில் விஜய் சேதுபதிக்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் வரவேற்பும் கிடைத்தது. இந்த நிலையில் விஜய் சேதுபதி விரைவில் அரசியல் கட்சி துவங்கப் போகிறார் என்ற ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி தனது அகில இந்திய விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக வி பிரசாத் என்பவரை நியமித்துள்ளார். மேலும் மாவட்ட மண்டல அளவில் ரசிகர் மன்றங்களை பலப்படுத்துதல் புதிய நிர்வாகிகளை உருவாக்குதல் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதனால் விஜய் சேதுபதியின் இந்த நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளதுடன் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன. ரசிகர் மன்றங்களை பலப்படுத்துவது தனது எதிர்கால சினிமா நலனுக்காகவா, அல்லது அரசியல் இயக்கம் துவங்க முன்னேற்பாடா என்று பலரும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.





