“ஜெயிலர்” திரைப்படம் சென்ற ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த “விக்ரம்” திரைப்படத்தின் வசூலையே முறியடித்துள்ளது. உலகளவில் “ஜெயிலர்” திரைப்படம் ரூ. 400 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் ஆகி வருகிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கியுள்ளனர். ரஜினிகாந்த்தான் நிரந்தர சூப்பர் ஸ்டார் என்று கூக்குரலிட்டு வருகின்றனர்.

“ஜெயிலர்” திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றுள்ளார். அவர் திரும்பி வந்தவுடன் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுக்க உள்ளாராம்.
பல ஆண்டுகளாகவே ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு கறி விருந்து வைக்க வேண்டும் என பலரும் விரும்பி வருகின்றனர். இது ரஜினிக்கும் தெரியும். ஆனால் ரஜினிகாந்த் ஆன்மீகவாதி என்று தன்னை வெளிப்படுத்திக்கொள்வதால் பொதுவாக கறி விருந்து வைப்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை என்றே பலரும் கூறுகின்றனர்.
எனினும் விருந்து என்றாலே கறி விருந்துதான் என்றாகிப்போன நிலையில் ரஜினிகாந்த் இமயமலையில் இருந்து திரும்பியவுடன் ரசிகர்களுக்கு மிகப் பிரம்மாண்டமான கறி விருந்து ஒன்றை ஏற்பாடு செய்யவுள்ளதாக ஒரு ஆச்சரியத் தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் அந்த கறி விருந்தில் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா பத்திரிக்கையாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், ஜெயிலர் படக்குழுவினர், ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஆகிய பலருக்கும் அழைப்பு கொடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல வருடங்களாகவே ரஜினிகாந்த் கறி விருந்து வைப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது மிக விரைவிலேயே ரஜினிகாந்த் கறி விருந்து வைத்து ரசிகர்களை சந்தோஷப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளிவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. “இந்த தருணத்திற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறோம்” என்று மிகவும் ஆவலுடன் அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.





