- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கை கோர்க்கப் போவது அந்த இயக்குனருடன்தான் -...

ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் மீண்டும் கை கோர்க்கப் போவது அந்த இயக்குனருடன்தான் – இந்த ஆட்டம் போதுமா கொழந்தே என கேட்டவராச்சே?

- Advertisement -

கடந்தாண்டில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்தார். அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இப்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துக்கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் நடந்து வரும் ஷூட்டிங்கில் கடந்த ஒரு வாரமாக ரஜினிகாந்த் பங்கேற்று நடித்து வருகிறார். 25 நாட்களுக்கு மேல் அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரம்யா கிருஷ்ணன் யோகிபாபு மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் இந்த 2ம் பாகத்திலும் நடிக்கின்றனர்.

- Advertisement -

இப்போது கோடை வெயில் காலமாக இருப்பதால், ரஜினிகாந்த் உடல் நலம் பாதிக்காதபடி அவுட்டோர் ஷூட்டிங்கை கேரளாவுக்கு மாற்றியிருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். ஏனெனில் ரஜினிகாந்த் வெயிலில் அதிக நாட்கள் நடித்தால் அவரது உடல் நலம் பாதிக்க கூடும் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே பாலக்காடு அட்டப்பாடியில் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள நிலையில், அவர் தங்கியிருக்கும் ஓட்டல் முன்பும், ஷூட்டிங் பகுதியிலும் அவரை காண வரும் ரசிகர்களை காரில் வரும்போதும் போகும் போதும் சந்திக்கும் ரஜினி கையசைத்து கும்பிடு போட்டு தனது ஸ்டைலில் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். இந்த வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகின்றன.

- Advertisement -

இந்த சூழலில் ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் டிவி சேனல் ஒன்றில் நேர்காணலில் பேசிய இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, ரஜினிகாந்துக்கு நான் ஒரு கதை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. இந்த படத்தை நாம் மீண்டும் சேர்ந்து பண்ணுவோம் என்று கூறிவிட்டார்.

எனவே ரஜினி பச்சைக்கொடி காட்டி விட்டதால், விரைவில் ரஜினி தரப்பில் இருந்து இதுகுறித்த தகவல் வெளியாகும் என்று அந்த நேர்காணலில் கார்த்திக் சுப்பராஜ் கூறியிருக்கிறார். ஏற்கனவே 2019ம் ஆண்டில் பேட்ட படத்தை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ். இந்த ஆட்டம் போதுமா கொழந்தே என ரஜினி கிளைமாக்ஸில் கேட்டு ரசிகர்களை அதிர வைத்தார். ஒருவேளை இந்த படம் பேட்ட 2 ஆக இருக்குமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்