- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடப் போங்கய்யா, மத்தவங்களுக்கு தண்ணீ காட்டற எனக்கே நீங்க தண்ணீ காட்டறீங்களா? நொந்துபோய் மீண்டும்...

அடப் போங்கய்யா, மத்தவங்களுக்கு தண்ணீ காட்டற எனக்கே நீங்க தண்ணீ காட்டறீங்களா? நொந்துபோய் மீண்டும் துபாய்க்கு விமானம் ஏறிய நடிகர் சிம்பு

- Advertisement -

நடிகர் சிலம்பரசன் என்கிற சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என எட்டு வயதிலேயே அழைக்கப்பட்டவர். புலி 8 அடி பாய்ந்தால், புலிக்குட்டி 16 அடி பாயும் என்று சொல்வதை போல, அப்பா டி ராஜேந்தர் போலவே, மகன் சிலம்பரசனும் சினிமா கலைத்துறையில், சிறந்த நடிகராக, கலைஞராக, இயக்குநராக, பாடகராக தன்னை, தன் திறமையை வெளிப்படுத்தியவர்.

துவக்கத்தில் மன்மதன், வல்லவன், விண்ணைத் தாண்டி வருவாயா, ஒஸ்தி போன்ற வெற்றிப் படங்களை தந்த சிலம்பரசன், ஒரு கட்டத்துக்கு பிறகு தமிழ் சினிமா இன்ஸ்டஸ்டரியில் இன்னொரு நவரச நாயகனாக மாறிப்போனார், முத்துராமன் மகன் கார்த்திக், சரியாக ஷூட்டிங் வரமாட்டார். அடிக்கடி நடிகைகளுடன் கிசு கிசுக்களில் சிக்கிக் கொள்வார்.

- Advertisement -

அதே போல நடிகர் சிலம்பரசனும் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டு பிறகு கால்ஷீட் தந்த நாட்களில் படப்பிடிப்புக்கு வரமாட்டார். சென்னையிலேயே இருந்தாலும், நட்சத்திர ஓட்டலில் ரூம் போட்டுக்கொண்டு படுத்து விடுவார். டைரக்டர், தயாரிப்பாளர் என யார் போனில் அழைத்தாலும் அவர் பேச மாட்டார். இதனால் சிம்பு என்றாலே தெறித்து ஓடும் இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் உண்டு.

ஒரு கட்டத்துக்கு பிறகு சினிமாவில் இருந்துக்கொண்டு இப்படி கெட்ட பெயரை சம்பாதிக்க வேண்டாம் என முடிவெடுத்த சிம்பு, கடந்த சில ஆண்டுகளாக ஷூட்டிங் சரியான நேரத்துக்கு வருகிறார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு போதிய ஒத்துழைப்பு தந்து வருகிறார். அதனால்தான் செக்கச் சிவந்த வானம், மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள், எந்த பஞ்சாயத்தும் இன்றி படப்பிடிப்பு நடந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் சொந்த படத் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் எஸ்டிஆர் 48 படம் தயாரிக்கப்படுகிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் ஷூட்டிங், பல மாதங்களாக தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. எப்போது படப்பிடிப்பு துவங்கும் என்றே தெரியவில்லை. கடந்த பிப்ரவரியில் ஷூட்டிங் என்றதால், துபாயில் இருந்த சிம்பு, சென்னை வந்தார். ஆனால் சொன்னபடி ஷூட்டிங் துவங்கவில்லை.

இதுகுறித்து ராஜ்கமல் பிலிம் நிறுவனத்திடம் பேசினால், அந்த படத்துக்கான முன் தயாரிப்பு பணிகள் நடப்பதால், அது முடிந்த பிறகே ஷூட்டிங் துவங்கப்படும் எனக் கூறியுள்ளனர். மாதக்கணக்கில் படப்பிடிப்புக்கு போகாமல், தயாரிப்பாளர் இயக்குநருக்கு தண்ணீ காட்டியவன் நான். என்னையே இப்படி மாதக்கணக்கில் வெயிட்டிங்கில் போட்டு தாமதம் செய்து, தண்ணீ காட்டறாங்களே என நொந்து போன சிம்பு, அடப்போங்கய்யா என்று அப்செட் ஆகி மீண்டும் துபாய்க்கே விமானம் ஏறிச் சென்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது சிம்பு ரசிகர்களை விரக்தியடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்