- Advertisement -
Homeபொழுதுபோக்குதீவிர அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன், விஜய் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னால், இப்படி...

தீவிர அரசியலில் ஈடுபடுவதால் சினிமாவில் இனி நடிக்க மாட்டேன், விஜய் வெளியிட்ட அறிவிப்புக்கு பின்னால், இப்படி ஒரு லாஜிக் இருக்கிறதா? – இது நமக்கு தெரியலையேப்பு…

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் டாப் லெவல் நடிகராக இருக்கிறார். தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்த விஜய்க்கு ரூ. 200 கோடி சம்பளம் தரப்பட்டதாக கூறப்படுகிறது. இது, தமிழ் சினிமாவில் அதிகபட்சமாக ஒரு நடிகர் வாங்கும் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல் கூட ரூ. 150 கோடி வரைதான் இதுவரை சம்பளம் வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்தார். தனது கட்சிக் கொடியை கடந்த 22ம் தேதி காலை பனையூரில் அறிமுகப்படுத்தி கொடியேற்றினார். தொடர்ந்து தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பொறக்குது என்ற கட்சி பாடலையும் விஜய் வெளியிட்டார்.

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தி அதே நாளில், கட்சிக் கொடியில் யானைகளை பயன்படுத்தியது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை மீறல் என்று பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கட்சிக்கொடியில் இருப்பது வாகை மலர் அல்ல, தூங்குமூஞ்சி மலர் என்றும் விமர்சனம் எழுந்தது.

இப்போது லேட்டஸ்ட் தகவலாக, நடிகர் விஜய் தனது அரசியல் கட்சி முதல் மாநில மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை என்ற கிராமத்தில் வருகிற செப்டம்பர் மாதம் 23ம் தேதி நடத்துவது உறுதியாகி உள்ளது. அந்த மாவட்ட போலீஸ் எஸ்பியிடம் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்லி ஆனந்த், பாதுகாப்பு கேட்டு மனு அளித்திருப்பது வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய், தவெக கட்சியை நடத்துவதில் வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிற வகையில் ஏற்பாடுகளை செய்து வருகிறார். இதற்கிடையே தி கோட் படத்தில் நடிப்பதுடன் இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்க இருப்பதாகவும், அந்த படத்தை எச் வினோத் இயக்குவதும் உறுதியாகி உள்ளது. ஆனால் அரசியலுக்கு சென்றபின், சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்று விஜய் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் கூறுகையில், அரசியலில் இருப்பவர்கள், சினிமாவில் நடிக்க கூடாது என்று எந்த சட்டமும் இல்லை. அதனால் விஜய் நடிப்பதும், நடிக்காமல் விடுவதும் அவரது சொந்த விருப்பம் என்று கூறியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வந்து, ஜெயித்துவிட்டால் சினிமாவில் நடிக்க போய்விடுவார், மக்களை கவனிக்க மாட்டார் என்ற விமர்சனத்தை தவிர்க்கவே, அந்த லாஜிக்கை உடைக்கவே, சினிமாவுக்கு புல்ஸ்டாப் வைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்