- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் தேவர கொண்டா - நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு டும்டும் டும்…தேதி எப்போது? வெளியான...

நடிகர் விஜய் தேவர கொண்டா – நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு டும்டும் டும்…தேதி எப்போது? வெளியான தகவலால் ரசிகர்கள் குஷி!

- Advertisement -

தமிழில் வாரிசு சுல்தான் போன்ற படங்களில் நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இந்த படங்கள் பெரிய வெற்றியை பெறாததால் தொடர்ந்து தமிழில் அவர் நடிக்கவில்லை. ஆனால் புஷ்பா புஷ்பா 2 படங்களின் அபார வெற்றியால் இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக அவர் மாறினார்.

கன்னட மொழியில் அறிமுகமான அவர் தெலுங்கு தமிழ் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவராக மாறி விட்டார். இந்தியில் அனிமல் படத்தில் தாராளமான கவர்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த பிறகு அவரை நேஷனல் கிரஷ் என்றுதான் ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.

- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். அவர்கள் இருவரும் கீதா கோவிந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த போது அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்து காதல் ஏற்பட்டது. பல வெளிநாடுகளுக்கு அவர்கள் சுற்றுலா சென்ற புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொள்வது எப்போது என்று தெலுங்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தகவல் வெளியானது.

- Advertisement -

அந்த நிகழ்வில் போடப்பட்ட நிச்சயதார்த்த மோதிரத்தை ராஷ்மிகா தனது கைவிரலில் அணிந்து வெளியிட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது. இப்போது ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவரகொண்டா திருமண தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி அவர்கள் இருவருக்கும் மிகவும் விமரிசையாக திருமணம் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. உதய்பூரில் உள்ள ஒரு மாளிகையில் இந்த திருமண விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் திருமணத்துக்கு பிறகு நடிகை ராஷ்மிகா மந்தனா மீண்டும் நடிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்