- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்ம தளபதி விஜய் தமிழக முதல்வர் ஆகி விட்டார், இனி ஜனநாயகன் ரிலீஸ் தேதி விரைவில்...

நம்ம தளபதி விஜய் தமிழக முதல்வர் ஆகி விட்டார், இனி ஜனநாயகன் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படுமா? ஆர்வமாக காத்திருக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராகி விட்டார். இன்று காலை தமிழ்நாடு கவர்னர் ஆர்வி அர்லேகர் முன்னிலையில் நடந்த பதவியேற்பு விழாவில் விஜய் முதல்வராகவும் 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாகவும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.

இந்த விழாவில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் புரடக்சன்ஸ் வெங்கட ரமணாவும் கலந்துக்கொண்டார். நேற்று முன்தினம் தவெக தலைவர் விஜய் கவர்னரை நேரில் சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்ற போது விஜயுடன் தயாரிப்பாளர் வெங்கட ரமணாவும் சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக விஜய் நடித்த ஜனநாயகன் படம் திரைக்கு வராமல் முடங்கிப் போயுள்ளது. இன்னும் இந்த படத்துக்கு சென்சார் சான்று கிடைக்கவில்லை. இடையில் தமிழக சட்டசபை தேர்தல் நடந்ததால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப் போனது.

இப்போது நடிகர் விஜய் தமிழகத்தின் முதல்வராகி விட்டார். அதனால் ஜனநாயகன் படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது, கவர்னர் சந்திப்பு மற்றும் முதல்வர் பதவியேற்பு விழா என 2 நிகழ்ச்சிகளிலும் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கலந்துக்கொண்டது ரசிசகர்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது.

- Advertisement -

முதலமைச்சராக விஜய் இப்போது அரசு சார்ந்த பணிகளிலும் மக்கள் நலம் சார்ந்த திட்டங்களிலும் முழு கவனம் செலுத்த துவங்கியிருக்கிறார். நாளை எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடக்க உள்ளது. தொடர்ந்து 13ம் தேதிக்குள் அவர் சட்டசபையில் தனது அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய ஒரு சூழலும் இருப்பதால் பிஸியாக இருந்து வருகிறார்.

அதனால் இன்னும் சில வாரங்களுக்கு விஜய் அரசு சார்ந்த பணிகளில் தீவிரம் காட்டினாலும் ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்தும் அவரது தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதியை அறிவிக்க படத்தின் தயாரிப்பாளர் முன்வர வேண்டும். சென்சார் தரப்புக்கும் விரைவில் சான்று தர அழுத்தம் தர வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்