சின்னத்திரை தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்சிதா மகாலட்சுமி. இவர் மகாலட்சுமி பிரிவோம் சந்திப்போம் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட தொடர்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர். இவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். இவர் பிரிவோம் சந்திப்போம் சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்து விட்டனர்.
நடிகை ரக்சிதா மகாலட்சுமி டிவி சீரியல்கள் மட்டுமின்றி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பிறகு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் 99/66 என்ற படத்தில் மகாலட்சுமி ரக்சிதா நாயகியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் சபரி ரோகிந்த் ஸ்வேதா பவன் கிருஷ்ணா கேஆர் விஜயா கேஎஸ்வி வெங்கடேஷ் ஸ்ரீலேகா பிஎல் தேனப்பன் சிங்கம்புலி முல்லை கோதண்டம் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
மித்ரா பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எம் எஸ் மூர்த்தி இந்த படத்தை தயாரித்து அவரே நடித்துள்ளார். மேலும் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை ஆகிய பொறுப்புகளையும் எம்.எஸ். மூர்த்தி தான் ஏற்றுள்ளார். 99/66 படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது.
இந்த விழாவில் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் ஆர்வி உதயகுமார் பேசுகையில், ரக்சிதா மகாலட்சுமியின் ரசிகன் நான். இந்த படத்தின் தயாரிப்பாளர் என்னையும் பேரரசையும் மீண்டும் படம் இயக்க வைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். நடிப்பு ராட்சசி ரக்சிதா மகாலட்சுமி கலக்கி இருக்கிறார் என்று ஆர்வி உதயகுமார் பேசினார். அடுத்து பேசிய இயக்குனர் சங்க செயலாளர் இயக்குனர் பேரரசு, ஆர்வி உதயகுமார் இயக்குனர் சங்கத் தலைவரா இல்லை ரக்சிதா மகாலட்சுமியின் ரசிகர் மன்ற தலைவரா என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு தீவிர ரசிகராக இருக்கிறார்.
ரக்சிதா மகாலட்சுமி எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அப்படியே மாறிவிடுகிறார். அவருக்கு எனது வாழ்த்துகள் என்று பேசினார். ஒரே சங்கத்தில் தலைவர் செயலாளர் பதவி வைக்கும் 2 இயக்குனர்களும் இப்படி நடிகை ரக்சிதா மகாலட்சுமியை புகழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 பேருமே பிரபல இயக்குனர்கள். இப்படி ஜொள்ளு விடுகிற மாதிரி பேசுறாங்களே என்று ரசிகர்கள் அவர்களை கலாய்த்து வருகின்றனர்.





