- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாடு அல்லது கேரளம் மாநிலத்துக்கு கவர்னர்? அல்லது இந்திய ஜனாதிபதி ஆகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்?...

தமிழ்நாடு அல்லது கேரளம் மாநிலத்துக்கு கவர்னர்? அல்லது இந்திய ஜனாதிபதி ஆகிறாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? – உண்மையை போட்டுடைத்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் குறித்து எப்போதும் பரபரப்பான தகவல்கள் இருந்துக்கொண்டே இருக்கின்றன. அதுவும் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு கடந்த சில மாதங்களாக ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் கவர்னர் ஆகிறார், கேரளாவின் கவர்னர் ஆகிறார், இந்திய ஜனாதிபதியாக ரஜினியை மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது என்று இணையத்தில் தகவல் பரவி வருகின்றன.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, ரஜினிகாந்த் கவர்னர் ஆகிறார், இந்திய ஜனாதிபதி ஆகிறார் என்பதெல்லாம் 100 சதவீதம் வதந்திதான். சோஷியல் மீடியாவில் பல பொய்யான தகவல்கள் வருகின்றன. அதை பார்த்து நாமும் சில கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவோம் என்று சிலர் இப்படி செய்கின்றனர்.

- Advertisement -

ஒரு சிலர் தான் ஆசைப்பட்டதை விரும்பியதை கூட இப்படி இணையத்தில் பரவச் செய்வார்கள். அதனால் ரஜினியை கவர்னராக பார்க்க ஆசைப்பட்ட யாரோ ஒருவரின் கற்பனை தான் இது. அதே நேரத்தில் கவர்னர் பதவி என்பது ரஜினிக்கு போதுமான ஒரு கெளரவமாக நான் நினைக்கவில்லை. அவர் ஒரு சூப்பர் ஸ்டார். 50 ஆண்டுகாலமாக சினிமாவில் இருப்பவர். அதுவும் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறார்.

இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் கவர்னர் பதவிக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல்வாதிகள்தான். அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் கொடுக்கிற ஒரு பதவிதான் கவர்னர் பதவி. அப்படி பார்க்கும் போது அந்த பதவியை விட ரஜினி இப்போது இருக்கும் இடம் மேலானது.

- Advertisement -

ஒருவேளை ரஜினி அப்படி கவர்னர் ஆக சம்மதித்தால் அவர் ஒரு படி இறங்கி வந்ததாக தான் நான் நினைக்கிறேன். அதனால் கண்டிப்பாக ரஜினி அதை ஏற்க மாட்டார். கவர்னர் பதவி கௌரவமானதாக இருந்தாலும் அது ஒன்றிய அரசின் உத்தரவுகளை செயல்படுத்துகிற ஒரு ஏஜண்ட் தான் அது. அதில் ரஜினிக்கு என்ன பெருமை இருக்கப் போகிறது? அதனால் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை.

அதே போல் அவர் குடியரசு தலைவராக வருவதற்கான வாய்ப்பும் குறைவுதான். கவர்னர் பதவிக்கு சொன்னது எல்லாமே ஜனாதிபதி பதவிக்கும் அப்படியே பொருந்தும். நாட்டின் முதல் குடிமகன் ஜனாதிபதி என்பதுதான் சட்டப்படி. ஆனால் அதிகாரம் என்று பார்த்தால் அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தான். ரஜினி அப்படி ஒரு ரப்பர் ஸ்டாம்பாக இருப்பதற்கு விரும்ப மாட்டார் என்று அந்த நேர்காணலில் ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்