- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் - இயக்குனர் சுந்தர் சி...

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படம் – இயக்குனர் சுந்தர் சி தானா? – வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் வேட்டையன். ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக மஞ்சுவாரியார் நடித்திருந்தார். லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது.

அதன்பிறகு நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கூலி என்ற படத்தில் நடித்தார். இது அவரது 171வது படம். இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. கூலி படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இப்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் மோகன்லால் சிவராஜ்குமார் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். சென்னை கேரளா பாலக்காடு பகுதிகளில் ஜெயிலர் 2 படப்பிடிப்பு 2 ஷெட்யூல் நடந்து முடிந்துள்ளது.

இந்நிலையில் ஜெயிலர் 2 படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கப் போகும் அடுத்த படம் யார் டைரக்டர் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில் சில தினங்களாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும், வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது. இப்போது இந்நிறுவன தயாரிப்பில் சுந்தர் சி மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

அதனால் மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் தனது நிறுவன தயாரிப்பில் ரஜினிகாந்த் படத்தை இயக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் பரவியது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் 1997ம் ஆண்டில் ரஜினிகாந்த் நடித்த அருணாசலம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க ஏற்கனவே கமிட் ஆனது உண்மைதான். ஆனால் இயக்குனர் சுந்தர் சி கிடையாது. இதுகுறித்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷிடம் சமீபத்தில் பேசிய ரஜினிகாந்த், கதைகளை கேட்டுக்கொண்டு இருக்கிறேன். இன்னும் முடிவு செய்யவில்லை. ஜெயிலர் 2 படம் ஷூட்டிங் முடித்த பிறகு இயக்குனர் முடிவு செய்த பிறகு அடுத்த படம் குறித்து அறிவித்து விடலாம் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்