- Advertisement -
Homeபொழுதுபோக்குபிச்சைக்காரன் கேரக்டரில் தனுஷ் நடித்த குபேரா படம் … ரசிகர்களின் மனங்களை வென்றதா? - வெளியான...

பிச்சைக்காரன் கேரக்டரில் தனுஷ் நடித்த குபேரா படம் … ரசிகர்களின் மனங்களை வென்றதா? – வெளியான முதல்கட்ட தகவல் இதுதான்!

- Advertisement -

தெலுங்கு பட முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் இன்று காலை ரிலீஸ் ஆனது. தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் குபேரா படம் வெளியாகி உள்ளது. நடிகர் தனுஷ் பிச்சைக்காரன் கேரக்டரில் நடித்திருக்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். தீபக் என்ற கேரக்டரில் நடிகர் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.

கோடீஸ்வரன் நீரஜ், பிச்சைக்காரர்களை பினாமியாக்கி தனது பணத்தை எல்லாம் மணி லாண்டரி செய்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். அந்தப் பணியை அவர் நாகார்ஜூனாவை வைத்து செய்கிறார். இதில் சிக்கும் பிச்சைக்காரரான தேவா, அதாவது நடிகர் தனுஷ் 10 ஆயிரம் கோடியை எடுத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிறார்.

- Advertisement -

அந்த பணத்தை வைத்து, ஏழைகளை பணக்காரர்களாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகிறார். இதற்கு படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனாவை துணைக்கு வைத்துக்கொண்டு தனுஷ் செய்கிறார். நாயகன் தேவாவை தேடி கண்டுபிடித்து தீர்த்துக்கட்ட கோடீஸ்வரர் நீரஜ் தனது ஆட்களை அனுப்புகிறார். வில்லனின் ஆட்களிடம் இருந்து தேவா தப்பித்தாரா? அவரை நம்பியிருந்த ஏழைகளின் வாழ்வு என்ன ஆனது என்பதுதான் இந்த குபேரா படத்தின் கதை.

திருப்பதி ஏழுமலையானின் பக்தி பாடலுடன் படத்தில் வரும் தனுஷின் அறிமுக காட்சியே அட்டகாசமாக உள்ளது. இந்த படத்தில் தேவா கேரக்டரில் பிச்சைக்காரனாவே தனுஷ் வாழ்ந்து காட்டி இருக்கிறார். கண்களில் கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு அவர் பல காட்சிகளில் யதார்த்தமாகவும் எமோஷனலாகவும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

அரசு அதிகாரியை பயன்படுத்தி பணக்காரர்கள் செய்யும் பண வேட்டைக்கு எதிராக தேவா மாறும் இடமெல்லாம் நடிப்பில் அசுரன் என்று நடிகர் தனுஷ் நிரூபித்திருக்கிறார். நல்ல திரைக்கதை, சிறந்த நடிப்பு என குபேரா படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையும் படத்துக்கு வலு சேர்த்துள்ளது. சக நடிகர்களின் நடிப்பும் படத்துக்கு பலமாக உள்ளது.

இந்த படம் 2025ம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும், நடிகர் தனுஷூக்கு விருது பெற்றுத் தரும் படமாகவும் இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். படத்தின் இயக்குனராக கதை திரைக்கதையில் சேகர் கம்முலா ஜெயித்திருக்கிறார். படத்தில் சில குறைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் கடந்தும் குபேரா பெரிய அளவில் ரசிகர்கள் கொண்டாடும் படமாக இருக்கிறது என்றும் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்