- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்த லைன் அப்பில் அசத்தும் ஆர்ஜே பாலாஜி, சூப்பரான காதல் கதையில் நடிக்கும் அவரது அடுத்த...

அடுத்தடுத்த லைன் அப்பில் அசத்தும் ஆர்ஜே பாலாஜி, சூப்பரான காதல் கதையில் நடிக்கும் அவரது அடுத்த படம் – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் ஆர்ஜே பாலாஜி. அதன்பிறகு கிரிக்கெட் காம்பியராக ஆர்ஜே பாலாஜி ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அவர் ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நிகழ்ச்சிகளை நேரடி வர்ணனை செய்யும்போது, அவரது நான்ஸ்டாப் கிண்டலான பேச்சை ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர்.

இதைத்தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். தேவி, நானும் ரவுடிதான் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோக்களுடன் காமெடி ரோலில் நடித்த ஆர் ஜே பாலாஜி, எல்கேஜி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கி நடித்தார்.

- Advertisement -

மூக்குத்தி அம்மன் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா, மூக்குத்தி அம்மன் கேரக்டரில் நடித்தது படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து சத்யராஜ் ஊர்வசி தம்பதியாக நடித்த வீட்ல விசேஷம் என்ற படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்தார். இந்த படமும் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு கொடுத்தது.

தொடர்ந்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு நடிகர் விஜயை நேரில் சந்தித்து, அவரது 69வது படத்தை இயக்க வாய்ப்பு கேட்டு கதையும் சொன்னார். அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்து போன நிலையிலும், இந்த கதையில் நான் நடித்தால் நன்றாக இருக்காது என்று விஜய் மறுத்து விட்டதார்.

- Advertisement -

நடிகர் விஜய்க்கு சொன்ன அந்த கதையில்தான் நடிகர் சூர்யா நடிக்கிறார். சூர்யா 45 படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி நடிகர், ஹீரோ, இயக்குனர் என்று தன்னை உயர்த்திக் கொண்ட ஆர்ஜே பாலாஜி இப்போது சொர்க்கவாசல் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இதுதவிர சூர்யாவின் 45வது படத்தை இயக்குகிறார். இதற்கான ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

மேலும் சில படங்களை தேர்வு செய்தும் கதாநாயகனாக நடித்து வருகிறார் ஆர் ஜே பாலாஜி. குட்நைட், லவ்வர் ஆகிய படங்களை தயாரித்த மில்லியன் டாலர் புரொடக்ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அம்மாமுத்து சூர்யா இயக்கத்தில் ஹேப்பி என்டிங் என்ற படத்தில் ஆர்ஜே பாலாஜி இப்போது நடித்து வருகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியானது. ஆர்ஜே பாலாஜியின் வாழ்க்கையில் வரும் ஏகப்பட்ட காதல்களை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்