- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல காமெடி நடிகருக்கு அட்வைஸ் செய்த நடிகர் அஜீத்குமார், தன்னோட வாழ்க்கை அனுபவத்தையே பாடமா சொல்லி...

பிரபல காமெடி நடிகருக்கு அட்வைஸ் செய்த நடிகர் அஜீத்குமார், தன்னோட வாழ்க்கை அனுபவத்தையே பாடமா சொல்லி இருக்கிறாரே? – தல எப்பவுமே தல தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் நடிகர் அஜீத்குமார். துவக்கத்தில் அல்டிமேட் ஸ்டார் என்றும் தல என்றும் ரசிகர்கள் அன்போடு அழைத்த நிலையில், இதுபோன்ற பட்டங்கள் எனக்கு வேண்டாம். என்னை அஜீத்குமார் என்பதற்கு ஏகே என்று சுருக்கமாக குறிப்பிட்டால் கூட போதும் என்று அறிக்கை வெளியிட்டவர்தான் அஜீத்குமார்.

அதுமட்டுமின்றி தனக்கு ரசிகர் மன்றங்களே வேண்டாம் என்று தன் ரசிகர் மன்ற இயக்கங்களை எல்லாம் கலைத்தவர். அத்துடன் ரசிகர்களை என்னுடைய சுய லாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன். என் படத்தை ரசித்து பார்ப்பதுடன் ரசிகனுக்கும், எனக்குமான தொடர்பு முடிந்துவிட்டது என்றும் பலமுறை கூறியவர்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் எந்த சினிமா பின்புலமும் இல்லாமல், தானாக முயற்சித்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து படிப்படியாக திறமையை வெளிப்படுத்தி உழைத்து முன்னுக்கு வந்தவர். இன்று ரூ. 163 கோடி வரை ஒரு படத்தில் நடிக்க சம்பளம் வாங்குகிறார். அவரது கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் தவம் கிடக்கின்றனர். ஆனால் அவர் நடிக்கும் படத்தின் பிரமோவில் அவர் பங்கேற்பதில்லை என்பது ஏகேவின் கொள்கையாக உள்ளது.

இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கர், அஜீத்குமாருடன் நடித்த மற்றும் பழகிய அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அஜீத்குமாருடன் பல காட்சிகளில் ரோபோ சங்கர் காமெடி ரோலில் நடித்திருந்தார். மேலும் விவேக், தம்பி ராமையா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

- Advertisement -

ஒருமுறை அஜீத்குமார் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது சிகரெட் பிடிக்க போறீங்களா என கேட்டார். ஆமாம் என்றேன். அதற்கு அவர் சிகரட்டை என்னிடம் கொஞ்சம் கொடுங்க எனக் கேட்டார். அப்போது அவருடன் இந்த உதவியாளர் ஒருவர், சார் மேடமுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆயிடும். நீங்க இதை நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது என்று கூறினார்.

அதற்கு அஜீத்குமார், நான் சிகரெட் பிடிக்கலைங்க, அதை கொண்டு வாங்க என்று சொன்னார். அந்த சிகரெட்டை என்னிடம் இருந்து வாங்கி பார்த்துக் கொண்டே இருந்தார். எப்படி எல்லாம் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன் என்று தெரியுமா என்று அஜித்குமார் கூற, அந்த சிகரட்டை அப்படியே அவரிடம் இருந்து வாங்கி அதனை பத்திரமாக வைத்திருக்கிறேன். அதன்பின் அஜித் சார், நான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 8 வருடங்கள் ஆகிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக நீங்களும் இதை விட்டுவிடுங்கள் சங்கர் என்று அஜீத்குமார் எனக்கு அறிவுறுத்தினார் என்று ரோபோ சங்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்