- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிமுக - திமுக கூட்டணியில் புதிய ஆட்சி அமையுங்கள், திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினாரா நடிகர்...

அதிமுக – திமுக கூட்டணியில் புதிய ஆட்சி அமையுங்கள், திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தினாரா நடிகர் ரஜினிகாந்த்? – மேனேஜர் தந்த விளக்கம்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 5 கட்சி இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 2 என மொத்தம் 13 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது.

இன்று சென்னை நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்த விழாவில் தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு ஆளுனர் ஆர்வி அர்லேகர் முன்னிலையில் முதல்வராக பதவியேற்றார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ராகுல் கலந்துக்கொண்டார். இதில் விஜய் உட்பட 10 அமைச்சர்களுக்கு கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

- Advertisement -

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சென்று அவரது வீட்டில் சந்தித்து பேசினார். அப்போது எப்போதும் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் அவர் கூறியிருந்தார். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தோல்வியடைந்த நிலையில் அவரை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் விஜய் ஆட்சியமைக்க கூடாது என்றும் அதிமுகவும் திமுகவும் இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்றும் அதற்கு பாஜக தரப்பில் நான் பேசி சம்மதம் வாங்கி விடுகிறேன். விஜய் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் திமுக எதிர்காலம் பாதிப்புகளை சந்திக்கும் என்று ஸ்டாலினிடம் ரஜினி அந்த சந்திப்பில் கூறியதாக இணையத்தில் சில அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

- Advertisement -

ரஜினி இப்படி விஜய்க்கு எதிராக செயல்பட்டதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில் ரஜினியின் மேனேஜர் ரியாஸ் இதுகுறித்து விளக்கம் தந்துள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் 42 ஆண்டு காலமாக நண்பர்களாக உள்ளனர்.

நட்பு ரீதியாக மட்டுமே ஸ்டாலின் அவர்களை ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பேசினார். இதில் எந்தவிதமாக அரசியலும் இல்லை. அவர்கள் சந்திப்பின் போது அரசியல் சார்ந்து எதுவும் பேசவில்லை. இது மாதிரியான வதந்திகளை ஊடகங்களில் பரப்ப வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று ரியாஸ் அந்த பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்