- Advertisement -
Homeபொழுதுபோக்குசிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம்… ஷூட்டிங்கில் ஆரம்பிப்பதில் சிக்கல் - எஸ்டிஆர் கொடுத்த ஐடியா...

சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் புதிய படம்… ஷூட்டிங்கில் ஆரம்பிப்பதில் சிக்கல் – எஸ்டிஆர் கொடுத்த ஐடியா ஒர்க் அவுட் ஆச்சா?

- Advertisement -

தக்லைஃப் படத்துக்கு பின் நடிகர் சிலம்பரசனும், விடுதலை 2 படத்துக்கு பின் இயக்குனர் வெற்றிமாறனும் இணையும் புதிய படத்தை தயாரிப்பாளர் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் கதை வடசென்னை படத்தின் கிளை கதையாக உருவாக உள்ளது. ஆனால் வடசென்னை படத்தின் 2ம் பாகம் அல்ல என்பதை ஏற்கனவே இயக்குனர் வெற்றிமாறன் தெளிவாக கூறிவிட்டார்.

ஆனால் 2 மாதங்களுக்கு மேலாகியும் இந்த படத்தின் ஷூட்டிங் இன்னும் துவங்கப்பட்டாமல் கால தாமதம் நீடிக்கிறது. இந்த படத்துக்கான பிரமோ ஷூட் நடத்தப்பட்ட நிலையில் அடுத்தக்கட்டமாக படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணமே படத்தின் மெகா பட்ஜெட்தான் பெரிய இடையூறாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

தயாரிப்பாளர் தாணு பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கடந்த 1980 90களிலேயே கோடிக்கணக்கில் பெரிய முதலீடு செய்து பெரிய பட்ஜெட் படங்களை எடுத்த முன்னணி தயாரிப்பாளர். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் பட்ஜெட் இப்போதைய நிலவரப்படி ரூ. 140 கோடிக்கு மேல் வருகிறது.

இப்போதைய தமிழ் சினிமாவின் நிலவரப்படி சிம்பு வெற்றிமாறனுக்கு இருக்கிற மார்க்கெட் அடிப்படையில் அவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படத்தை தயாரித்தால் ரூ. 140 கோடியை முதலீடு செய்தால் திரும்ப எடுக்க முடியுமா என்பது பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால் ரஜினி கமல் அஜீத்குமார் போன்ற மாஸ் ஹீரோக்கள் நடித்த படங்களே செம அடிவாங்கி நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்க செட் ஒன்று அமைத்துள்ளனர். சின்ன செட் என ஆரம்பித்த இது நாளடைவில் பெரிய செட் ஆக மாறி, அதற்கே ரூ. 20 கோடி செலவாகும் என்ற சூழல் உருவாகி இருக்கிறது. ஒரு செட் அமைக்க ரூ. 20 கோடி செலவு அவசியமா என்று தயாரிப்பாளர் தாணு யோசித்த நிலையில், பேசாமல் லைவ் லொக்கேஷன் போய்விடலாம். செட் அமைக்கும் செலவு குறையும் என சிம்பு தயாரிப்பாளருக்கு ஐடியா தந்திருக்கிறார்.

ஆனால் இயக்குனர் விரும்பியடி லைவ் லொக்கேஷன் எங்கும் அமையவில்லை. மேலும் மக்கள் கூட்டம் மழை போன்ற காரணங்களால் லைவ் லொக்கேஷன் ஷூட்டிங் 20 நாள் என்றால் 40 நாள் கூட ஆகிவிடும். செட் அமைப்பதை விட இது அதிக செலவாகி விடும் என்பதால் கடைசியில் செட் அமைக்கும் முடிவுக்கே தயாரிப்பாளர் தாணு ஓகே சொல்லியிருக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு நிச்சயமாக துவங்கும் என்ற ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்