- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இருவரில் ஒருவர்தான் 'அரசன்' சிலம்பரசனுக்கு ஹீரோயின்... பரபரக்கும் படத்திற்கான வேலைகள்... இது வேற லெவல்...

அந்த இருவரில் ஒருவர்தான் ‘அரசன்’ சிலம்பரசனுக்கு ஹீரோயின்… பரபரக்கும் படத்திற்கான வேலைகள்… இது வேற லெவல் காம்போ மாமே…

- Advertisement -

விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக சிலம்பரசனை வைத்து புதிய திரைப்படத்தை எடுக்கிறார். கலைப்புலி எஸ் தாணு இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். ஏற்கனவே தாணு தயாரிப்பில், வாடிவாசல் திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அதற்கான தொழில் நுட்ப வேலைகள் இன்னும் இருப்பதால், சிலம்பரசன் உடனான படத்தை கையில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன்.

இதற்கான ப்ரோமோ சூட்டிங் சென்னை எழும்பூர் அருகே நடைபெற்றது. அதில் சிலம்பரசன், வெற்றிமாறனுடன் இயக்குனர் நெல்சனும் இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போதே இந்த திரைப்படம் நிச்சயமாக வட சென்னை படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று பலரும் கூறினார்கள். அதேசமயம் வடசென்னை தயாரிப்பாளர் தனுஷ் என்பதால் இதற்கு என் ஒ சி சான்றிதழ் தர மறுத்திருப்பதாகவும் பேசப்பட்டது.

- Advertisement -

இவை அனைத்தையும் வீடியோ வெளியிட்டு தெளிவுபடுத்தினார் வெற்றிமாறன். சிலம்பரசன் உடன் தான் இணையும் திரைப்படம் நிச்சயம் வடசென்னை உலகில் தான் இருக்கும் என்றும் அதே சமயம் அது வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்றும் கூறினார். வட சென்னையில் இடம்பெற்ற கதாபாத்திரங்களே இதில் இருப்பார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.

இதே போல் இந்த விஷயம் தொடர்பாக தனுஷிடம் பேசியபோது அவர் என்ஓசி கொடுத்து விட்டதாகவும் தெளிவுபடுத்தி இருந்தார். வட சென்னை படத்தில் இரண்டாம் பாகம் அமையப்போகிறது என்றால் அது நிச்சயம் தனுஷை வைத்துதான் நடக்கும் என்றும் கூறியிருந்தார். இப்படி இருக்க சிம்பு படத்திற்கான வேலைகளை வெற்றிமாறன் தொடங்கி இருக்கிறார்.

- Advertisement -

ஆனால் அதற்கான ப்ரோமோ வீடியோ இன்னும் வெளியாகவில்லை. இதனை திரையரங்குகளிலும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கான தணிக்கை சான்று கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே படத்திற்கு அரசன் என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். அதுவும் வட சென்னை திரைப்படத்தின் எழுத்து வடிவத்திலேயே இருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த மாத இறுதிக்குள் அரசன் திரைப்படத்தின் சூட்டிங் பணிகளை தொடங்க வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார். வட சென்னை பகுதியிலேயே படத்தை உருவாக்க முடிவு செய்து இருக்கிறார்கள். முதலில் இதற்கு த்ரிஷா தான் கதாநாயகியாக நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது. தற்போது படக்குழு சமந்தா மற்றும் சாய் பல்லவி ஆகியோரை அணுகி இருப்பதாக பேசப்படுகிறது. இவர்கள் இருவரில் ஒருவர், அரசன் திரைப்படத்தின் கதாநாயகியாக இருப்பார் என திரைத்துறை வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்