- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள், நடிகர் கமல் வெளியிட்ட அந்த முக்கிய அறிவிப்பு -...

தமிழக மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள், நடிகர் கமல் வெளியிட்ட அந்த முக்கிய அறிவிப்பு – வருகிற தேர்தலில் அவரது நிலைப்பாடு இதுதானா?

- Advertisement -

மிக்ஜாம் புயல் காரணமாக, தமிழகத்தில் சென்னை மாநகரம் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் மிதக்கிறது. அதே போல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் நீதிமய்ய தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையாக செல்பட்டாலும் ஒரு எல்லை வரைதான் இயற்கையின் சீற்றங்களை சமாளிக்க முடியும். இந்த நேரத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துக்கொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட வேண்டும். இந்த நிலமை சீரடைய உதவ வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கிறார்.

அதாவது மழை வெள்ள பாதிப்புகளை திமுக அரசு இயன்றவரை தவிர்க்கவும், பாதுகாக்கவும் போராடிய நிலையில், இயற்கையின் வரம்பு மீறிய சீற்றங்களை தவிர்க்க முடியாது என, திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். மேலும், அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என, திமுக அமைச்சர் பாணியில் திமுக அரசுக்கு ஆதரவும் கேட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் வாயிலாக, தான் ஒரு திமுக ஆதரவாளர் என்பதையும், வரும் தேர்தலில் காங்கிரஸ் உடன்தான் மக்கள் நீதி மய்யம் கை கோர்க்கும் என்பதையே, இந்த கைகோர்த்து செயல்பட வேண்டும் என்பதையும் மறைமுகமாக சொல்லி விட்டார் என அரசியல் விமர்சகர் பேசத் துவங்கியுள்ளனர்.

வரும் சட்டசபை தேர்தல், நாடாளுமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் கூட்டணி சேரும். அந்த வகையில் மக்கள் நீதிமய்யமும் திமுக, காங்கிரஸ் கூட்டணியில்தான் இணையும் என்பதை இப்போதே கமல்ஹாசன் பூடகமாக சொல்லிவிட்டார். அரசியல் கட்சி துவங்கிய காலத்தில் திமுக ஆட்சியை, திமுகவை திட்டிய கமல்ஹாசன் காலப்போக்கில் திமுக பக்கம் சாய்ந்துவிட்டார் என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

ஒரு நடிகராக, தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற ஹீரோவாக வலம் வந்த கமல்ஹாசன், படத்தில் வெற்றி பெற்றதை போல, அரசியலில் சாதிக்கவோ, முன்னிலை பெறவோ முடியவில்லை. கடைசி வரை குதிரையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில், இப்போது ஏதாவது ஒரு வளர்ந்த கட்சியுடன் ஒட்டிக்கொண்டு, தேர்தலை சந்தித்து சில தொகுதிகளையாவது வென்று, கட்சிக்கும் தனக்கும் பலம் சேர்க்கும் முடிவுக்கு வந்துவிட்டதாக, அரசியல் விமர்சகர்களும், சினிமா விமர்சகர்களும் பேச துவங்கி விட்டனர்.

சற்று முன்