- Advertisement -
Homeபொழுதுபோக்குதண்டட்டி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் கவின் - ஹீரோயின் அந்த மாஸ்...

தண்டட்டி பட இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் கவின் – ஹீரோயின் அந்த மாஸ் ஹிட் பட நடிகையா? வேற லெவல்தான் போங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக கவின் இருக்கிறார். துவக்கத்தில் விஜய் டிவியில் சீரியல் ஒன்றில் சின்னதம்பி என்ற கேரக்டரில் கவின் நடித்து மக்களிடம் பரிச்சயமானார். அதன்பிறகு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் நல்ல கவனத்தை பெற்றார்.

அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகராக மாறியுள்ள கவின் இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த டாடா லிப்ட் போன்ற படங்கள் ரசிகர்களிம் வரவேற்பை பெற்று வெற்றியைப் பெற்றன.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஹாய் என்ற படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வருகிறார். தண்டட்டி படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தண்டட்டி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு சிறந்த படமாகும். அதனால் ராம் சங்கையா இயக்கும் இந்த படத்திற்கும் அதீத கவனம் கிடைத்துள்ளது.

இந்த படத்தை லப்பர் பந்து சர்தார் ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் ப்ரீ புரடக்சன் பணிகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பு துவங்குவதில் பல மாதங்களாக தாமதம் நீடித்து வந்தது. அதற்கு காரணம் படத்துக்கு சரியான கதாநாயகி அமையவில்லை.

- Advertisement -

கதைக்கு ஏற்ற சரியான நாயகியை தேர்வு செய்வதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது லப்பர் பந்து படத்தில் நாயகியாக நடித்த நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் நாயகியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

லப்பர் பந்து படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அவரது நேர்த்தியான நடிப்பை ரசிகர்கள் பெரிதும் பாராட்டினர். இந்த படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாணுக்கு ஜோடியாக சஞ்சனா நடித்திருந்தார். இப்போது நடிகர் கவினுக்கு அவர் இந்த படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார். அதனால் இந்த படமும் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்