- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா - வைரமுத்து விவகாரம் குறித்த கேள்விக்கு கிண்டலாய் பதிலளித்த நாம் தமிழர் கட்சி சீமான்...

இளையராஜா – வைரமுத்து விவகாரம் குறித்த கேள்விக்கு கிண்டலாய் பதிலளித்த நாம் தமிழர் கட்சி சீமான் – என்ன இப்படி பேசிப்புட்டாரு?

- Advertisement -

சமூக வலைதளங்களில் கடந்த ஒரு வாரமாக இளையராஜா வைரமுத்து பிரச்னை அனல் பறந்துக்கொண்டு இருக்கிறது. இளையராஜா நான் இசை அமைத்த பாடல்கள் அனைத்தும் எனக்குத்தான் சொந்தம் என்று காப்புரிமை கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருக்கிறார். இதேபோல் பாடகர்களும் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது என்று ஏற்கனவே இது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதற்கிடையே, கடந்த வாரத்தில் நடந்த படிக்காத பக்கங்கள் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற வைரமுத்து, பாடல் வரிகளும் இசையும் கலந்ததுதான் பாட்டு. இதைக்கூட புரிந்து கொள்ளாதவன் ஞானி அல்ல, அஞ்ஞானி என்று குறிப்பிட்டிருந்தார். இது இளையராஜாவை, வைரமுத்து தாக்கி பேசுவதாக கூறி வைரலானது. இளையராஜாவின் தம்பி கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிரான ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

அந்த வீடியோவில், வைரமுத்துவை வளர்த்து விட்டதே நாங்கள் தான். வைரமுத்து வாயை மூடிக்கொண்டு இரு. இனிமேல் இளையராஜா பற்றி பேசினால் நடப்பதே வேறு என்றும் எச்சரிக்கை செய்திருந்தார். இது மேலும் பரபரப்பை அதிகமாக்கியது. இளையராஜாவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் வைரமுத்துவுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து தங்களை கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் தமிழ் சினிமா சார்ந்த முக்கிய நடிகர், நடிகைகளும் இசைத்துறை சார்ந்தவர்களும் கவிஞர்களும், இதே போல் இளையராஜாவுக்கு ஆதரவாகவும் வைரமுத்து ஆதரவாகவும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் உயிர் தமிழுக்கு என்ற அமீர் நடித்த புதிய படம் நாளை மறுதினம் (10ம் தேதி) வெளியாகிறது. இந்த படத்தின் பிரத்யேக காட்சியை நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் பார்க்க வந்திருந்தார்.

- Advertisement -

அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், உயிர் தமிழுக்கு படம் மிக அருமையாக வந்துள்ளது. மக்களுக்கு தேவையான அரசியல் கருத்துக்களை நகைச்சுவையுடன் நையாண்டித்தனமாக கூறியுள்ளனர் என்று கூறினார். அப்போது வைரமுத்து இளையராஜா மோதல் குறித்து கேள்வி எழுப்பிய போது, சீமான் கிண்டலாக பதிலளித்தார்.

கல்வியா, வீரமா, செல்வமா என மறுபடியும் சரஸ்வதி படம்தான் எடுக்க வேண்டும். இயல் இசைத்தமிழ் நீ செய்த அரும்சாதனை என அப்போதே பாடிவிட்டனர். இசையும் மொழியும் சேர்ந்ததுதான் பாடல். அதை மறுக்கவே முடியாது. இது இரண்டு தகப்பன்களுக்கு இடையேயான பிரச்சனை. இதற்கிடையே எங்களை கோர்த்து விடாதீங்க. இது தொடர்பாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இளையராஜா அப்பா கேட்கும் காப்புரிமை கோரிக்கை என்பது நியாயமான ஒன்று. அதை புரியாமல் பலரும் அவரை விமர்சிப்பது தவறான செயல் என்று சீமான் கூறினார்.

- Advertisement -

சற்று முன்