- Advertisement -
Homeபொழுதுபோக்குஆக்சன் திரைப்படத்தில் அதிரடி காட்டிய நடிகை அனுஷ்கா… காதி படத்தில் ரீ என்ட்ரி தந்த தேவசேனைக்கு...

ஆக்சன் திரைப்படத்தில் அதிரடி காட்டிய நடிகை அனுஷ்கா… காதி படத்தில் ரீ என்ட்ரி தந்த தேவசேனைக்கு சூப்பர் கம்பேக் கிடைத்ததா? – காதி படம் எப்படி இருக்கு?

- Advertisement -

தெலுங்கு மற்றும் தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் அனுஷ்கா. அவர் நடித்த அருந்ததி பாகுபலி ருத்ரமாதேவி போன்ற படங்கள் பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. ஆனால் ஒரு கட்டத்தில் உடல் பருமன் காரணமாக பட வாய்ப்புகளை இழந்த அனுஷ்கா, இப்போது மீண்டும் காதி படம் மூலம் திரைக்கு வந்திருக்கிறார். கிரீஷ் இயக்கிய காதி படத்தின் மூலம் இன்று ரசிகர்களுக்கு ரீ என்ட்ரி தந்திருக்கிறார்.

காதி படத்தின் கதைக்களம் இதுதான். இந்த படத்தில் அனுஷ்கா, விக்ரம் பிரபு இருவரும் காதி என்ற தொழில் செய்கின்றனர். அதாவது அவர்கள் வாழும் காடுகளில் போதைப்பொருள் இலைகள் வளர்கிறது. அதை பறித்து மூட்டை மூட்டையாக கட்டிக் கொண்டு வந்து பெரிய வியாபாரிகளுக்கு சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் விக்ரம் பிரபுவின் அப்பா இருந்துவிடுகிறார். அதனால் காதி தொழில் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்கின்றனர். அந்த நேரத்தில் ஊருக்குள் ஒரு கும்பல் வந்து, அங்கு இருப்பவர்களுக்கு தெரியாமல் திராவகமாக போதைப்பொருள் செய்கின்றனர். இதை அறிந்து அந்த கும்பல் யார் என்று தேடுகின்றனர்.

அது அனுஷ்கா மற்றும் விக்ரம் பிரபுதான் என்று தெரிய வருகிறது. அதனால் அவர்களுக்குள் அழைத்து பேசி ஒன்றாக பார்ட்னர்களாக இருக்கலாம் என்று பேசி முடிக்கின்றனர். ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் திருமணத்தின் போது வந்து விக்ரம் பிரபுவை கொன்று விடுகின்றனர். அனுஷ்காவையும் ஆடையின்றி அவமானப்படுத்துகின்றனர்.

- Advertisement -

அவர்களை பழிவாங்காமல் விட மாட்டேன் என்று வீர சபதம் எடுத்து அடுத்து எதிரிகளை அனுஷ்கா பழி வாங்குவதே காதி படத்தின் மீதி கதை. விக்ரம் பிரபுவுடன் ஆரம்பத்தில் காதல், கலாட்டா என கலகலப்பாக இருக்கும் அனுஷ்கா, விக்ரம் பிரபு இறப்புக்கு பிறகு ருத்ர ஆண்டவம் ஆடுகிறார். ஒரு ஹீரோவுக்கு நிகராக அவர் சண்டை போடும் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். விக்ரம் பிரபுவும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆனால் போதைப் பொருள் கடத்தும் இவர்களே சமூக விரோதிகள் என்பதால், படத்தில் எமோஷனல் காட்சிகள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் ஒர்க் அவுட் ஆகவில்லை. அடுத்து இதுதான் படத்தில் நடக்கப்போகிறது என்று காட்சிக்கு காட்சி படம் பார்ப்பவர்களுக்கே தெரிவதால் திரைக்கதை பலவீனமாக உள்ளது. அனுஷ்கா மட்டுமே இந்த படத்தில் பிளஸ் பாயிண்டாக இருக்கிறார். ஆனால் திரைக்கதையில் எந்த புதுமையும் இல்லாதது படத்தில் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்