- Advertisement -
Homeபொழுதுபோக்குவந்தாச்சு கிங் கானின் ஜவான் திரைப்படம்... இந்தியில் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தினாரா அட்லி... ட்விட்டர் விமர்சனம்...

வந்தாச்சு கிங் கானின் ஜவான் திரைப்படம்… இந்தியில் அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தினாரா அட்லி… ட்விட்டர் விமர்சனம் இதோ…

- Advertisement -

கொரோனாவுக்கு பின்னர் பாலிவுட் திரையுலகில் எந்த ஒரு திரைப்படமும், சொல்லிக் கொள்ளும் படியான வெற்றியை பெறவில்லை. சிறிய நடிகர்கள் முதல் உச்ச நட்சத்திரங்கள் நடித்த அத்தனை திரைப்படங்களும் தோல்வியை தழுவியதால், ஒரு நிலையான இடத்தை பெற பாலிவுட் திரையுலகம் திண்டாடி வந்தது. எப்போதும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களை குறை கூறும், பாலிவுட் வட்டாரம் இப்போது என்ன செய்கிறது என்ற கேள்வியும் எழுந்தது.

இப்படி இருக்க கடந்த ஜனவரி மாதம் ஷாருக் கான் நடிப்பில் வெளியானது பதான் திரைப்படம். தீபிகா படுகோனே, சல்மான் கான் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மேலும் துவண்டு கிடந்த பாலிவுட் திரை உலகிற்கு இந்தத் திரைப்படம் புத்துணர்ச்சியை கொடுத்தது.

- Advertisement -

250 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் அதிகமாக வசூல் ஈட்டி சாதனை படைத்தது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து, அட்லி இயக்கத்தில் ஜவான் படத்தில் இணைந்தார் ஷாருக்கான். இந்தத் திரைப்படத்தை ஷாருக்கான் மனைவியே தயாரித்திருந்தார்.

தமிழில் ராஜா ராணி மற்றும் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் வெற்றியை கொடுத்ததால் இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. நாயகியாக நயன்தாராவும், சிறப்பு தோற்றத்தில் தீபிகா படுகோனேவும் நடிக்க, வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட அட்லியின் முதல் பாலிவுட் திரைப்படம் என்பதால் பலரும் ஜவான் திரைப்படத்தைப் பற்றி பேசத் தொடங்கினர்.

- Advertisement -

இதன் ட்ரெய்லரும் ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இசையில் பாடல்கள் முணுமுணுக்கும் ரகத்தில் இருந்ததால் பலரும் படத்தை எதிர்பார்த்தனர். இதற்கான பிரீ புக்கிங்கும் அசுர வேகத்தில் நடைபெற்றது. மும்பை மட்டுமல்லாமல் சென்னை, பெங்களூரிலும் ஜவான் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.

இந்த நிலையில் தற்போது ஜவான் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. குறிப்பாக ஷாருக்கானின் அறிமுகக் காட்சி, இடைவேளை காட்சிகள் பிரமாதமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இரண்டாம் பாதி மிக நன்றாக இருப்பதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஒட்டு மொத்தமாக கமர்சியல் ரசிகர்களுக்கு ஜவான் திரைப்படம் மிகப்பெரிய விருந்து கொடுத்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும் ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஜவான் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை ஈட்டும் என்று பலரும் ஆருடம் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்