- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதியை தொடர்ந்து சிம்பு படத்திற்கும் இப்படி ஒரு கிராக்கியா... ஆச்சரியப்படும் தமிழ் திரையுலகம்... போடு...

விஜய் சேதுபதியை தொடர்ந்து சிம்பு படத்திற்கும் இப்படி ஒரு கிராக்கியா… ஆச்சரியப்படும் தமிழ் திரையுலகம்… போடு டண்டணக்கா…

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் அவரது ஐம்பதாவது திரைப்படமாக வெளிவந்தது மகாராஜா. குரங்கு பொம்மை திரைப்படத்தை எடுத்து பலரது கவனத்தையும் ஈர்த்து இருந்த நித்திலன் சுவாமிநாதன் தான் இதனை இயக்கியிருந்தார். அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

சாதாரண பழிவாங்கல் கதை தான் என்றாலும், அதனை இயக்குனர் சொன்ன விதம் தான் இங்கு பலரையும் கவர்ந்து இழுத்தது. நான்லீனியர் முறையில், கடந்த காலத்திற்கும் இப்போதுக்கும் இடையேயான நிகழ்வுகளை ஒரே கோர்வையாக கொடுத்திருந்தார் இயக்குனர்.

- Advertisement -

படம் திரையரங்குகளில் வெளியாகி நன்றாக பேசப்பட்டது போல, ஓடிடியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிற மாநில ரசிகர்களும் மகாராஜா பற்றி பேச ஆரம்பித்தனர். இது வெளிநாடுகளுக்கும் பரவியது. நீண்ட நாட்களுக்குப் பிறகு சீன மொழியில் அந்த திரைப்படம் டப் செய்யப்பட்டது. அங்கும் வரவேற்பு அள்ளியது.

இப்படி நாடு விட்டு நாடு தாண்டி மகாராஜா திரைப்படம் பேசப்பட்டது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. தற்போது இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது சிலம்பரசனின் மாநாடு திரைப்படம். 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். கல்யாணி பிரியதர்ஷன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

- Advertisement -

இந்த திரைப்படத்தின் இமாலய வெற்றிக்கு மிக முக்கிய காரணம் எஸ் ஜே சூர்யா தான். அவர் வரும் ஒவ்வொரு காட்சிகளும் திரையரங்குகளில் தீப்பொறியை உண்டு பண்ணின. சொல்லப்போனால் தனது உடல் மொழியிலேயே அட்டகாசம் செய்தார் எஸ்.ஜே சூர்யா. டைம் லூப் கான்செப்ட்டை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

இந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த திரைப்படத்தை மீண்டும் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். அதுவும் இங்கு அல்ல ஜப்பான் நாட்டிலாம். அங்கு டப் செய்யப்பட்டு மாநாடு திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனை அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்து இருக்கிறார். மே மாதம் அங்கு ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்