- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரங்கம் அதிர இன்று வருகிறது அரசன் ப்ரோமோ வீடியோ... காட்சிகளைப் பார்த்து சிலிர்த்துப் போய் சிலம்பரசன்...

அரங்கம் அதிர இன்று வருகிறது அரசன் ப்ரோமோ வீடியோ… காட்சிகளைப் பார்த்து சிலிர்த்துப் போய் சிலம்பரசன் வெளியிட்ட பதிவு…

- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறனும் சரி நடிகர் தனுஷும் சரி வெளியில் எங்கு சென்றாலும், எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அவர்களிடம் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி, வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது என்பதுதான். இதுகுறித்து வாய் திறக்காமல் வந்த தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும், அண்மையில் அதற்கான பணிகள் தொடங்கும் என்று கூறினர்.

இதற்கு ஒரு படி மேலே போய் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அடுத்த ஆண்டு வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் ஆரம்பமாகும் என்று தெரிவித்தார். இப்படியான சூழலில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் சிலம்பரசன் உடன் வெற்றிமாறன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அப்போதே பலரும் இதனை வடசென்னை படத்தில் இரண்டாம் பாகம் இருக்குமோ என்று சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர்.

- Advertisement -

ஆனால் இது வடசென்னை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் இல்லை என்பதை தெளிவு படுத்தினார் இயக்குனர் வெற்றிமாறன். அதேசமயம் வடசென்னை உலகில் தான் இந்த திரைப்படம் இருக்கும் என்றும் அந்த திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இதிலும் வருவார்கள் எனவும் கூறி இருந்தார். இதை அடுத்து சிலம்பரசன் வெற்றிமாறன் திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் டைட்டில் அரசன் என்பதை அறிவித்தார் தாணு. அதன் போஸ்டரை பார்க்கும் போதே, இது ஒரு குறிப்பிட்ட காலத்தை மையப்படுத்தி பீரியாடிக் திரைப்படமாக எடுக்கப்படுவது தெரிய வந்தது.

- Advertisement -

இந்தத் திரைப்படத்திற்காக பங்க் கெட்டப்புடன் காட்சியளிக்கிறார் சிலம்பரசன். இதன் ப்ரோமோ சூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் அருகே விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் அதில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதுதான். இப்படியான சூழலில், இன்று மாலை 6:00 மணிக்கு அரசன் படத்தின் ப்ரோமோ வீடியோ திரையரங்குகளில் வெளியாகிறது.

இதில் ஆரம்பத்தில் தனுஷின் வாய்ஸ் இருக்கும் என்று சொல்கிறார்கள். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் நடிகர் சிலம்பரசன், இப்போதுதான் அரசன் ப்ரோமோவின் திரையரங்கு வெர்ஷனை பார்த்தேன். நான் சொல்கிறேன் டைம் கிடைத்தால் போய் திரையரங்குகளில் சென்று பாருங்கள் அந்த அனுபவத்தை தவற விடாதீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சிம்புவின் இந்தப் பதிவு அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்