- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் சிம்பு... நம்ம எஸ்டிஆர்ரா இது என ரசிகர்கள் ஆச்சரியம்...

இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் சிம்பு… நம்ம எஸ்டிஆர்ரா இது என ரசிகர்கள் ஆச்சரியம்…

- Advertisement -

பத்து தல திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு அடுத்ததாக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி உடன் கமிட்டானார். துல்கர் சல்மானை வைத்து கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் என்னும் வெற்றி திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி கொடுத்திருந்ததால், இவர்களின் கூட்டணி மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

 

இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது தொடர்பான தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதன் பிறகு படத்திற்கான எந்த ஒரு முன்னெடுப்பும் நடக்கவே இல்லை. வரலாறு சார்ந்த திரைப்படம் என்பதால் இதற்கான ப்ரீ ப்ரொடக்சன் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார் தேசிங்கு பெரியசாமி.

 

அவருக்கும், தேவையான நேரத்தை சிம்பு கொடுத்ததால், படத்திற்கான வேலைகள் மெல்ல ஆர்வமாகி கொண்டிருந்தன. கிட்டத்தட்ட அறிவிப்பு வெளியாகி ஆறு மாதங்களாக எந்த ஒரு தகவலும் வெளியாகாத சூழலில், சிம்புவின் பிறந்தநாளன்று தேசிங்கு பெரியசாமி படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியானது. அதில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதற்கான சூட்டிங் தொடங்க சில நாட்களே இருந்த சூழலில் திடீரென, தக் லைப் படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. மணிரத்னம் கமல்ஹாசன் இணையும் இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால் சீட் பிரச்சனை காரணமாக இருவரும் விலகியதால், அந்த கதாபாத்திரத்திற்கு சிம்பு மற்றும் அசோக்செல்வன் இருவரும் நடிக்க ஒப்பந்தம் ஆகினர்.

 

இதனைத் தொடர்ந்து சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தி வருகிறார் மணிரத்னம். சமீபத்தில் கிளைமாக்ஸிதற்கு முந்தைய காட்சி புதுச்சேரி விமான நிலையத்தில் நடைபெற்றது. சுற்றி விமானங்களுக்கு நடுவே சண்டைக் காட்சிகளை அங்கு படமாக்கினர். இந்த நிலையில் தக் லைப் திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

இதனால் இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த படம் வெளியாவது உறுதியாகி இருக்கிறது. இதனிடையே சிம்பு இளம் இயக்குனர் எம் ஆர் மாதவனிடம் கதை கேட்டு இருப்பதாக கூறப்படுகிறது. எம் ஆர் மாதவன் இதற்கு முன்பாக வடசென்னையை மையப்படுத்தி டைனோசர்ஸ் என்னும் திரைப்படத்தை இயக்கினார். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. தற்போது இயக்குனர் கூறி இருக்கும் கதை சிம்புவிற்கு மிகவும் பிடித்துப் போனதாம். இதனால் இருவரும் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சற்று முன்