- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க பாடினா தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தான் சார்... டிராகன் பட பாடலுக்கு வாய்ஸ் கொடுக்கும் எஸ்...

நீங்க பாடினா தமிழ்நாட்டுக்கே பார்ட்டி தான் சார்… டிராகன் பட பாடலுக்கு வாய்ஸ் கொடுக்கும் எஸ் டி ஆர்… வைரலாகும் ப்ரோமோ வீடியோ…

- Advertisement -

நடிகர் சிலம்பரசனுக்கு கடைசியாக 2023 ஆம் ஆண்டு பத்து தல திரைப்படம் வெளியாகி இருந்தது. ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தை எடுத்த கிருஷ்ணா தான் இதனை இயக்கியிருந்தார். ஏ ஆர் ரகுமான் இசையில் இதன் பாடல்கள் ஹிட் அடிக்க, படம் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை.

அதற்கு முன்னதாக மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு என அடுத்தடுத்த இரண்டு வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்திருந்தார். இந்த நிலையில் சிலம்பரசன் அடுத்ததாக, இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தை எடுத்திருந்ததால் இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு இருந்தது.

இது முழுக்க முழுக்க வரலாற்று சம்பந்தப்பட்ட திரைப்படமாக இருக்கும் என்றும், அதிக செலவில் இது உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க முன் வந்தது. ஆனால் கடைசி நேரத்தில், இந்த ப்ராஜெக்ட்டை அந்த நிறுவனம் கைவிட, படம் கேள்விக்குறியானது.

இது ஒரு பக்கம் இருக்க சிலம்பரசனும் அடுத்ததாக, மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடிக்க சென்று விட்டார். கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. திரிஷா கௌதம் கார்த்திக் ஐஸ்வர்யா லட்சுமி நாசர் அபிராமி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருக்கிறது.

இதன் சூட்டிங் பணிகள் நிறைவடைந்திருக்கும் சூழலில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூன் மாதம் இந்த திரைப்படம் வெளியாகிறது. இதைத்தொடர்ந்து தனது அடுத்த திரைப்படத்திலும் சிம்பு கமிட் ஆகி இருக்கிறார். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து தான் இந்த படத்தை இயக்க இருக்கிறார்.

தற்போது அஸ்வந்த் மாரிமுத்து, பிரதீப் ரங்க நாதனை வைத்து டிராகன் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். அடுத்த மாதம் 21 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படத்தில், ஒரு காதல் தோல்வி பாடலை சிம்பு பாடியிருக்கிறார். ஏன்டி விட்டுப் போன என தொடங்கும் இந்த பாடலின் புரோமோ வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்