- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழி பாடகி கெனிஷா இப்போது கர்ப்பமாக இருக்கிறாரா? - இதென்னப்பா...

நடிகர் ரவி மோகனின் நெருங்கிய தோழி பாடகி கெனிஷா இப்போது கர்ப்பமாக இருக்கிறாரா? – இதென்னப்பா புது டிவிஸட்டா இருக்குது?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜெயம் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ரவி. இந்த படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி என்றே அழைக்கப்பட்டார். தொடர்ந்து தனி ஒருவன் எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி போகன் வனமகன் பேராண்மை சந்தோஷ் சுப்ரமணியம் தீபாவளி என பல வெற்றிப் படங்களை ஜெயம் ரவி ரசிகர்களுக்கு கொடுத்தார்.

இதற்கிடையே ஆர்த்தி என்பவரை காதல் திருமணம் செய்துக்கொண்டார். 10 ஆண்டுகளுக்கு மேல் அவர்களது குடும்ப வாழ்க்கை நீடித்த நிலையில் 2 மகன்கள் இந்த தம்பதிக்கு உள்ளனர். ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார் டிவி சீரியல் தயாரிப்பாளர். அவர் தனது மருமகன் நடிகர் ஜெயம் ரவியை வைத்து சில படங்களும் தயாரித்தார். ஆனால் அந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் கடந்தாண்டில் திடீரென நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனுதாக்கலும் செய்தார். இந்த வழக்கு இப்போது விசாரணையில் இருந்து வருகிறது. இதற்கிடையே பாடகி கெனிஷா என்பவருடன் நடிகர் ஜெயம் ரவி நெருக்கமான நட்பில் இருப்பது இணையத்தில் வைரலானது.

மேலும் நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என்றும் சில மாதங்களுக்கு முன்பு மாற்றிக்கொண்டார். பாடகி கெனிஷா என்னுடைய தோழி என்றும் என்னுடைய வாழ்க்கையில் அவர் ஒளியாக வந்திருக்கிறார் என்றும் பகிரங்கமாக நடிகர் ரவிமோகன் பேசினார். மேலும் சமீபத்தில் அவர் ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார்.

- Advertisement -

இந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் யோகிபாபு நாயகனாக நடிக்கும் ஒரு படத்தை ரவி மோகன் டைரக்ட் செய்கிறார். மேலும் தனது நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவுடன் இணைந்து நடிகர் ரவி மோகன் நடிக்கிறார். இந்த சூழ்நிலையில் ரவி மோகனின் நெருங்கிய தோழி பாடகி கெனிஷா கர்ப்பமாக இருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து பாடகி கெனிஷா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட கெனிஷா, நான் கடைசியாக இன்ஸ்டாகிராமில் போட்ட ஸ்டோரியை பார்த்துவிட்டு, நான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். ஆனால் எனது வயிறை பாருங்கள். அதில் சாப்பாடு மட்டும்தான் செல்கிறது. நான் கர்ப்பமாக இல்லை. அந்த வீடியோ வேறு ஒரு அறிவிப்புக்காக வெளியானது என்று கெனிஷா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்