சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியீட்டுக்காக தயாராக இருக்கிறது அமரன் திரைப்படம். ரங்கூன் திரைப்படத்தின் மூலம் வெள்ளித் திரையில் அறிமுகமான ராஜ்குமார் பெரியசாமி தான் இந்த படத்தை எடுத்திருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரித்துள்ளது.
ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை தான் மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கதாநாயகியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். அண்மையில் அவர் குறித்த அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக அவர் முகுந்தன் முகுந்தன் என கூறிவிட்டு செய்யும் முக பாவனைகள் பலரையும் கவர்ந்தது.
அந்த வீடியோவிற்கு தனது இசையின் மூலம் கூடுதலாக மெருகேற்றி இருந்தார் ஜிவி பிரகாஷ். சண்டையில் வீர மரணமடையும் ராணுவ வீரனின் கதையைத்தான் இந்த திரைப்படம் பேசுகிறது. இறுதிக் காட்சியில் கனத்த இதயத்துடன் பலரும் திரையரங்கை விட்டு வெளியேறுவார்கள் என சினிமா விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
வரும் 31 ஆம் தேதி அதாவது தீபாவளிக்கு அமரன் திரைப்படம் வெளியாகும் சூழலில் அதன் இசை வெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற கதாநாயகன் சிவகார்த்திகேயன் வழக்கம்போல தனது கவுண்டர் காமெடிகளையும், கலகல பேச்சையும் கொடுத்து அந்த இடத்தையே உயிர்ப்புடன் வைத்திருந்தார்.
படத்தின் இடைவேளைக் காட்சியில் துப்பாக்கியை வைத்து சுட வேண்டியது போன்ற சீன் இருக்கும், அப்போது படக்குழுவினர் என்னிடம் சார் இப்போதே சுட வேண்டாம், ஆக்ஷன் சொன்ன பிறகு இதனை செய்யுங்கள் என்று கூறினர். ஆனால் நான், தானாக செய்யவில்லை குளிரில் அப்படி நடுங்குவதாக கூறி சிரிக்க வைத்தார். காஷ்மீரில் திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில் அதனைத் தான் இவ்வளவு நக்கலாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.
இதேபோல் சாய்பல்லவி குறித்தும் பேசிய அவர், பிரேமம் திரைப்படத்தை பார்த்துவிட்டு சாய் பல்லவியின் மொபைல் நம்பரை பெற்று அவரை பாராட்டினேன். ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் நன்றி அண்ணா அண்ணா என்று கூறிக் கொண்டிருந்தார். எனக்கு இது கடுப்பாகிவிட்டது. இப்போது மலர் டீச்சர் ஆக பேசுங்கள், சாய் பல்லவியாக பேசாதீர்கள் என்று கூறினேன். ஒரு நாள் நாம் நிச்சயம் இணைந்து பணியாற்றலாம் என்றும் தெரிவித்தேன். அவர் ஒவ்வொரு படத்திற்கும் தனது திறமையை நிரூபித்து வருகிறார் அவர் ஒரு பிராண்ட் நடிகை என்று பேசினார்.





