- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பாடா… ஒரு வழியா வெங்கட் பிரபுவுக்கு ஓகே சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன் - ஷூட்டிங் எப்போ...

அப்பாடா… ஒரு வழியா வெங்கட் பிரபுவுக்கு ஓகே சொன்ன நடிகர் சிவகார்த்திகேயன் – ஷூட்டிங் எப்போ ஸ்டார்ட் பண்றாங்க தெரியுமா?

- Advertisement -

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு. ஆரம்பத்தில் உன்னை சரணடைந்தேன் ஏப்ரல் மாதத்தில் சிவகாசி போன்ற சில படங்களில் நடித்த வெங்கட்பிரபு பெரிய அளவில் சினிமாவில் வரவேற்பை பெற முடியவில்லை. இதையடுத்து திடீரென இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

கடந்த 2007ம் ஆண்டில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வௌியான சென்னை 28 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து சரோஜா கோவா மாசு என்கிற மாசிலாமணி மங்காத்தா மாநாடு என பல படங்களை இயக்கிய அவர், கடைசியாக இயக்கிய படம் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்.

- Advertisement -

கடந்தாண்டு செப்டம்பரில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் ரூ. 445 கோடி வசூலித்தது. இந்த படத்துக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தான் வெங்கட்பிரபு இயக்குவதாக இருந்தார். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெங்கட்பிரபுவை ஓரம் கட்டிவிட்டார்.

அடுத்து அவர் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படம், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படம் ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து கமிட் ஆகி நடித்து வருகிறார். இதில் வெங்கட்பிரபுவுக்கு 2026ம் ஆண்டு இறுதியில்தான் எனது கால்ஷீட் தர வாய்ப்புள்ளது என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால் தி கோட் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் விஜயுடன் இணைந்து சிவகார்த்திகேயனை கேமியோ ரோலில் நடிக்க வைத்ததே அவரது அடுத்த படத்தை இயக்கும் நம்பிக்கையில்தான். ஆனால் இப்படி நம்மை வெயிட்டிங்கில் போட்டு விட்டாரே என வெங்கட்பிரபு புலம்பும் நிலையில் இருந்தார். சிவகார்த்திகேயனுக்கு தொடர்ந்து தூண்டில் போட்டுக்கொண்டே இருந்தார்.

அவரது தொடர் முயற்சி வீண் போகவில்லை. சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்த இயக்குனர் வெங்கட்பிரபு, படத்தில் முழு ஸ்கிரிப்டையும் அவரிடம் தந்துள்ளார். ஸ்கிரிப்ட்டை படித்து பார்த்து உற்சாகமான சிவகார்த்திகேயன், உடனே ஓகே சொல்லிவிட்டார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

- Advertisement -

சற்று முன்