- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் - பிறகு இத பண்ணி தான்...

முதலில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டேன் – பிறகு இத பண்ணி தான் நடிக்க வச்சாங்க.. மார்க் ஆண்டனி பட சக்சஸ் மீட்டில் எஸ்ஜே சூர்யா சொன்ன தகவல்

- Advertisement -

சமீபத்தில் ரிலீஸான மார்க் ஆண்டனி படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இன்று, அந்த படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடந்தது. இதில் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர்கள் விஷால், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில், நடிகர் எஸ்ஜே சூர்யா பேசியதாவது,

சில ஆண்டுகளுக்கு முன் கொரோனோ காலகட்டத்திற்கு பிறகு, மார்க் ஆண்டனி படம் பற்றி, என்னிடம் இயக்குநர் பேச வந்தார். படத்தில் பழுத்த பழமாக, வயதான கேரக்டர் என்றார். கேட்டவுடனே, கிழவன் வேஷமா, இப்போ தான் கொஞ்சம் முன்னேறீட்டு வர்றேன், வேண்டாம் சார், என மறுத்து விட்டேன். அதன் பிறகு, ஒருமுறை விஷாலை சந்தித்த போது, இதுபற்றி கேட்டார். பின், கதையை கேட்டுவிட்டு முடிவெடுங்க, என்றார்.

அதன்பிறகு, மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனை வரச்சொல்லி கதை கேட்டேன். சூப்பராக இருந்தது. விஷாலை மட்டும் சந்திக்காவிட்டால், மீண்டும் இயக்குநரை சந்தித்திருக்க மாட்டேன். இந்த கதையை கேட்டிருக்க மாட்டேன். இந்த படத்தில் நடித்திருக்க மாட்டேன். இப்படி ஒரு வெற்றி கிடைத்திருக்காது. இதற்கு முக்கிய காரணம், விஷால்தான்.

இதில் விஷாலை போலவே எனக்கும் இரட்டை ரோல் வேண்டும் என்றேன். 20 நாட்களில் அதற்கேற்ப கதை ரெடி செய்து வந்தார். அவர் நடிகர்களின் இயக்குநர், ரசிகர்களின் இயக்குநராக இருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன் நடித்து காட்டியதை காப்பி அடித்துதான் ‘ஏண்டா, பொம்பள ஷோக்கு கேக்குதா, பொம்பள ஷோக்கு’ என்ற டயலாக் டெலிவரி, நடிப்பு கூட அவர் சொல்லிக் கொடுத்ததுதான்.

இந்த படத்தை பொருத்த வரை, கோடிக்கணக்கில் பணம் வசூல் செய்கிறது என்பதை விட, கவலையை மறந்து மக்கள் சிரிக்கிறார்கள். மனக்கவலையில் இருப்பவர்கள், மன அழுத்தத்தில் இருப்பவர்கள் இந்த படத்தை பார்த்து, மனம் விட்டு சிரிக்கின்றனர். கவலையை மறந்து ரசிக்கின்றனர். என்னை பொருத்த வரை இதுதான் மார்க் ஆண்டனி படத்தின் மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறேன்.

இன்னும் எத்தனை படங்கள் நானும், விஷாலும் நடிப்போம் என்று தெரியாது. அது 2 படமாக இருக்கலாம். 20 படமாக இருக்கலாம். ஆனால், ஒரு ஹீரோவாக இருந்தும், விஷால் என்னிடம் நடந்துக்கொண்ட விதமும், தாராள மனதும், எனக்கு தந்த ஆதரவும் என்றும் மறக்க முடியாது. இந்த உறவும், உணர்வும் என்றென்றும் தொடர வேண்டும், என வெளிப்படையாக பேசி இருக்கிறார் எஸ்ஜே சூர்யா.

சற்று முன்