- Advertisement -
நடிகர் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, அன்பு நெல்சன் என்ன ஒரு படம்? என் அருமை சகோதரர் அனிருத் நீங்கள் அமைத்த அந்த எலிவேஷன் காட்சிகள் படத்தை வேறொரு தளத்திற்கே கொண்டு சென்று விட்டன. இந்த ஆண்டு உங்கள் பிறந்தநாளை கொண்டாட இதைவிட சிறந்த வழி இருக்க முடியுமா? சிறப்பாக பணியாற்றிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என் அன்புகள். ஆனால் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் என்னால் அதற்கு மேல் வார்த்தைகளை வெளிப்படுத்த முடியவில்லை என்று அதில் சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியிருக்கிறார்.





