- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் வருகிறதா? இராமாயணா படம் ரிலீஸில் திடீர் சிக்கல் -...

இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் வருகிறதா? இராமாயணா படம் ரிலீஸில் திடீர் சிக்கல் – தியேட்டர்கள் முன்பு போராட்டம் நடத்துவதாக ஸ்ரீராம்லீலா மகாசங் அறிவிப்பு!

- Advertisement -

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் இராமாயணம் இப்போது சர்ச்சையில் உள்ளது. இந்த படத்தில் இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில் படத்தை வெளியீட்டுக்கு முன்பாக தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று ஸ்ரீராம்லீலா மகாசங் அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

வால்மீகி எழுதிய இராமாயணம் காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இராமாயணா திரைப்படத்தில் இந்தி நடிகர் ரன்பீர் கபூர் ராமர் ஆகவும் நடிகை சாய் பல்லவி சீதையாகவும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இராவணன் கேரக்டரில் கேஜிஎஃப் நடிகர் யாஷ் நடித்திருக்கிறார். சூர்ப்பனகை கேரக்டரில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இராமாயணா படத்தின் முதல் பாகம் வருகிற தீபாவளி பண்டிகைக்கும் படத்தின் இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டில் தீபாவளி பண்டிகைக்கும் வெளியாகும் என ஏற்கனவே படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மற்றும் உலக புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் இணைந்து இசையமைத்து வருகின்றனர்.

இராமாயணா படத்தின் கிளிம்ப்ஸ் டீசர் மற்றும் டிரெய்லர் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக பிரம்மாண்டமான விஷூவல் எபெக்ட்ஸ் பின்னணி இசை கேரக்டர்களின் தோற்றம் மற்றும் காட்சியமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் படம் குறித்த பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக ராமர் கதாபாத்திரம் பலவீனமாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சிலர் குற்றம்சாட்டி விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதுகுறித்து ஸ்ரீராம்லீலா மகாசங் அமைப்பு தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த கடிதத்தில், இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தக்கூடிய காட்சிகள் படத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் படத்தை வெளியீட்டுக்கு முன்பாக எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த கோரிக்கையை தயாரிப்பு நிறுவனம் ஏற்காவிட்டால் இராமாயணா திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து படக்குழு தரப்பில் விளக்கம் எதுவும் வெளியாகுமா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது

சற்று முன்