- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதிர்பார்த்த வரவேற்பை பெறாத கேங்கர்ஸ் படம், அப்செட் ஆன இயக்குனர் சுந்தர் சி எடுத்த அதிரடி...

எதிர்பார்த்த வரவேற்பை பெறாத கேங்கர்ஸ் படம், அப்செட் ஆன இயக்குனர் சுந்தர் சி எடுத்த அதிரடி முடிவு – அட அதையே கேன்சல் பண்ணிட்டாரே…?

- Advertisement -

இயக்குனர் சுந்தா் சி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் வெளியான படம் கேங்கர்ஸ். இதில் சுந்தர் சி நாயகனாக நடித்திருந்தார். ஏறக்குறைய 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிகர் வடிவேலு நடித்திருந்தார்.

கேங்கர்ஸ் படத்தில் கேத்தரின் தெரசா வாணி போஜன் சந்தான பாரதி முனிஷ்காந்த் அருள்தாஸ் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வின்னர் கிரி லண்டன் என சுந்தர் சி இயக்கிய படங்களில் வடிவேலு கேரக்டர் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது போல, இந்த படத்திலும் வடிவேலு காமெடி அதிரிபுதிரியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது பொய்த்துப் போய்விட்டது.

ஒரு கைப்புள்ள கேரக்டர் போலவோ பேக்கரி ஓனர் வீரபாகு போலவோ வக்கீல் வெடிமுத்து போலவோ அல்லது கிரிகாலன் மேஜிக் ஷோ கேரக்டர் போலவோ கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு நடிப்பு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சுந்தர் சி வடிவேலு காமெடி காம்போ கேங்கர்ஸ் படத்தில் எடுபடவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி, நடிகை குஷ்பு தம்பதிக்கு இந்த ஆண்டில் தங்களது 25ம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுகின்றனர். அதற்காக கேங்கர்ஸ் படத்தின் தயாரிப்பாளர், அவர்களை ஒரு மாத காலம் ஐரோப்பிய நாடுகளுக்கு இன்ப சுற்றுலா சென்று கொண்டாடவும் அதற்கான முழு செலவுகளையும் அவரே ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார். அவர்களது பயணத் திட்டமும் ரெடியாக இருந்தது.

ஆனால் இயக்குனர் சுந்தர் சி அந்த பயணத் திட்டத்தையே கேன்சல் செய்துவிட்டார். பதிவு செய்யப்பட்ட விமான டிக்கெட்டுகளையும் ரத்து செய்துவிட்டார். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. கேங்கர்ஸ் படம் எதிர்பார்த்த வெற்றியை வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை. இதற்கு முந்தைய படங்களான அரண்மனை 4 மதகத ராஜா படங்கள் சக்கைப் போடு போட்டன.

அதனால் கேங்கர்ஸ் படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பை பெறாததற்கு கதை திரைக்கதை இயக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்தான் காரணம். இதே போன்ற ஒரு சிக்கல் இப்போது அவர் டைரக்ட் செய்து வரும் மூக்குத்தி அம்மன் 2 படத்திலும் ஏற்பட்டு விடக் கூடாது. ஏனெனில் இது 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நயன்தாரா நடிப்பில் உருவாகும் பிரமாண்ட படம். அதனால் அந்த படத்தின் ஸ்கிரிப்டில் முழு கவனத்தை செலுத்தி அந்த கதையை மேலும் மேலும் மெருகேற்றி வருகிறார். வருகிற 8ம் தேதி மூக்குத்தி அம்மன் 2 படப்பிடிப்பு துவங்குகிறது.

சற்று முன்