- Advertisement -
Homeபொழுதுபோக்குகேங்கர்ஸ் திரைப்படம் அந்தப் புகழ்பெற்ற சீரிஸ் போன்றுதான் இருக்கும்... கலகலப்பாக பேசிய இயக்குனர் சுந்தர் சி...

கேங்கர்ஸ் திரைப்படம் அந்தப் புகழ்பெற்ற சீரிஸ் போன்றுதான் இருக்கும்… கலகலப்பாக பேசிய இயக்குனர் சுந்தர் சி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலந்த கமர்சியல் திரைப்படங்களை எடுப்பதில் கெட்டிக்காரர் இயக்குனர் சுந்தர் சி. தாய்மாமன் திரைப்படத்தில் தொடங்கிய அவரது திரையுலக பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது. அவரது துள்ளலான திரைக்கதைக்கு என தனி ரசிகர் பட்டாளம் இங்கு இருக்கிறது.

தற்போது 2கே கிட்ஸ்களுக்கும் பிடித்த வகையில் திரைப்படத்தை எடுப்பதால், இன்னும் துடிப்புடன் திரை உலகில் அவர் பயணித்து வருகிறார். அண்மையில் அவரது இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படமே இதற்கு சாட்சி. இது எடுக்கப்பட்டது என்னவோ 2013 ஆம் ஆண்டு தான். விஷால் சந்தானம் உள்ளிட்டோர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

ஆனால் பொருளாதாரப் பிரச்சினை காரணமாக அந்த திரைப்படம் முடங்கி கிடக்க, பல்வேறு சவால்களைத் தாண்டி இந்த திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பொங்கலன்று வெளியானது. இதில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், பலரிடத்திலும் இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றதுதான்.

தற்போது கதாநாயகனாக பலருக்கும் பரீட்சையம் ஆகிவிட்ட சந்தானத்தை, அதில் நகைச்சுவை நடிகராக பார்க்க முடிந்தது பலருக்கு உற்சாகத்தை கொடுத்தது. விண்டேஜ் சந்தானத்தின் ஒவ்வொரு கவுன்டர் காமெடிகளும் கலக்கலாக இருப்பதாக பலரும் கூறினார்கள். இப்படி விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

- Advertisement -

இப்படியான சூழலில் அடுத்ததாக சுந்தர் சி கேங்கர்ஸ் என்னும் திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இதில் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்தப் படத்திற்கான நிகழ்ச்சி நடைபெற அதில் சுந்தர் சி மற்றும் வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பேசிய இயக்குனர், இது தமிழ் சினிமாவுக்கு மிகவும் புதுமையான கதையாக இருக்கும்.

மணிஹெய்ட்ஸ் சீரிஸ் போன்று இருக்கும். ஆனால் உள்ளூரில் நடப்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தின் டைட்டிலை என்னவாக வைப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கேங்ஸ்டர்ஸ் தொடர்பான படம் என்பதால் அது பற்றி வடிவேலுவிடமும் கேட்டேன். அவர் உடனடியாக கேங்கர்ஸ் என்று கூறினார். அப்படி ஒரு வார்த்தையே இல்லை என்று தெரிவித்தேன். பிறகு அதையே ஏன் டைட்டில் ஆக வைக்க கூடாது என்று யோசனை வந்தது. எல்லாம் நாம் உருவாக்குவது தானே. அதனால் அந்த தலைப்பையே வைத்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்