- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு நடிகருடன் கைகோர்க்கும் கமர்சியல் கிங் தமிழ் இயக்குனர்... எதிர்பாராத காம்போவால் இரண்டு திரை உலகமும்...

தெலுங்கு நடிகருடன் கைகோர்க்கும் கமர்சியல் கிங் தமிழ் இயக்குனர்… எதிர்பாராத காம்போவால் இரண்டு திரை உலகமும் ஆச்சரியம்…

- Advertisement -

காதல், பிரம்மாண்டம், டார்க் காமெடி என பலதரப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வபோது எடுக்கப்பட்டாலும், கமர்சியல் சினிமாவுக்கு என்று ஒரு தனி வரவேற்பு இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. கே எஸ் ரவிக்குமாரை தொடங்கி இங்கு பல இயக்குனர்களும் கமர்சியல் திரைப்படங்களை கொடுப்பதில் கிங் ஆக இருந்து வந்தனர்.

 

- Advertisement -

குறிப்பாக இயக்குனர் சுந்தர் சி, கமர்சியல் திரைப்படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இங்கு உருவாக்கிக் கொண்டார். முறைமாமன் என்னும் திரைப்படத்தில் தொடங்கிய அவரது பயணம், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் வரை வந்து நிற்கிறது.

 

- Advertisement -

கதையில் லாஜிக்கை பார்க்காமல் அதில் கமர்சியல் எலமெண்ட்களை தூவி விட்டு, ஒரு சிறந்த மசாலா படம் இருப்பதில் சுந்தர் சி கெட்டிக்காரராக இருக்கிறார். 90 களின் இறுதியில் அவர் தனது பயணத்தை ஆரம்பித்தாலும், இப்போது வரை தனது இயக்கத்தில் வெற்றி படங்களை சுந்தர் சி கொடுத்து வருவதால் அவரை தயாரிப்பாளர்கள் விரும்புகின்றனர்.

 

கோலிவுட்டில் பேய் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், அரண்மனை திரைப்படத்தை எடுத்து ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸையும் அலற வைத்தார் சுந்தர் சி. அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அரண்மனை படத்தின் இரண்டு மூன்று மற்றும் நான்காம் பாகங்களை அடுத்தடுத்து இயக்கினார்.

 

இதே போல் அவரது கலகலப்பு திரைப்படமும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி எடுத்தார். தற்போது அவர் வடிவேலுவுடன் இணைந்து ஒரு படத்தை இயக்கி நடித்து வருகிறார். தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

 

இதன் பிறகு அவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். முதல் பாகத்தை பாலாஜி மற்றும் சரவணன் ஆகியோர் இணைந்து எடுத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் சுந்தர் சி கைக்கு சென்று இருக்கிறது. நயன்தாரா தான் இதிலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு நடிகர் ரவி தேஜா உடன் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது. கமர்சியல் படங்களை கொடுப்பதில் ரவிதேஜா கை சேர்ந்தவர் என்பதால் படத்திற்கான அறிவிப்புக்கு இரு திரை உலகமும் காத்திருக்கிறது.

- Advertisement -

சற்று முன்