- Advertisement -
Homeபொழுதுபோக்குகோடை விடுமுறையை குதூகலமாக்க வைகைப்புயலுடன் வருகிறார் சுந்தர் சி... திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்ததால் எகிறும்...

கோடை விடுமுறையை குதூகலமாக்க வைகைப்புயலுடன் வருகிறார் சுந்தர் சி… திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்ததால் எகிறும் எதிர்பார்ப்பு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் அப்போது முதல் இப்போது வரை கமர்சியல் திரைப்படங்களை மட்டுமே கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் சுந்தர் சி. இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அவர் பல்வேறு திரைப்படங்களில் இடம் பெற்று இருக்கிறார். முறைமாமன் திரைப்படம் தான் அவரது திரையுலக பயணத்தின் முதல் திரைப்படமாக அமைந்தது.

அங்கிருந்து மேட்டுக்குடி உள்ளத்தை அளித்தா என ஏராளமான வெற்றி திரைப்படங்களைக் கொடுத்த சுந்தர் சி, 25 ஆண்டுகளைக் கடந்தும் வெற்றிகரமாக திரைத்துறையில் பயணித்து வருகிறார். தலைநகரம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர், அதிலும் வெற்றி கொடி நாட்டினார்.

- Advertisement -

இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு பழைய இயக்குனர்கள் தங்கள் இருப்பிடத்தை தக்க வைக்க போராடிவரும் சூழலில், கலகலப்பு அரண்மனை சீரிஸ்களை கொடுத்து பாராட்டைப் பெற்றார் சுந்தர் சி. இந்த நிலையில் சமீபத்தில் அவர் இயக்கத்தில் மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது.

இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. விஷால் சந்தானம் உள்ளிட்ட ஏராளமானோர் இதில் நடித்திருந்தார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த திரைப்படம் வெளிவராமல் பெட்டிக்குள்ளேயே முடங்கி கிடந்தது. இப்படியான சூழலில் பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பிறகு பின் வாங்கியதால், சிறு சிறு திரைப்படங்கள் ரேசில் இறங்கின.

- Advertisement -

இந்தத் தருணத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் களமிறங்கியது மதகஜராஜா திரைப்படம். அதைவிட பலரும் ஆச்சரியப்பட வேண்டியது இந்த திரைப்படம் வெற்றி பெற்றது தான். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 12 ஆண்டுகள் கழித்து வெளியான இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது.

இந்த நிலையில் அவர் தற்போது வைகைப்புயல் வடிவேல் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்து இருக்கிறார். முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக எடுக்கப்பட்டிருக்கும் இதற்கு கேங்கர்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் வடிவேலு பி டி மாஸ்டராக வருவதாக கூறுகிறார்கள். கோடை விடுமுறையை குதூகலமாக அடுத்த மாதம் 24 ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisement -

சற்று முன்