- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? இந்த முறை விஜய் சேதுபதியே...

பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்? இந்த முறை விஜய் சேதுபதியே வருவாரா? ஆவலாக எதிர்பார்க்கும் பிக்பாஸ் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017ம் ஆண்டு முதல் துவங்கி ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. 2023ம் ஆண்டு வரை 7 ஆண்டுகள் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். அதன் பிறகு கடந்த 2 ஆண்டுகளாக நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் இன்னும் 2 மாதங்களில் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 துவங்க உள்ளது.

இந்த முறையும் நடிகர் விஜய் சேதுபதியே இந்த 10வது சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியை போல் இல்லாமல் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் சில முக்கிய மாற்றங்களை செய்திருக்கிறார்கள். முந்தைய சீசன்களில் சினிமா நடிகர் நடிகைகள் டிவி நட்சத்திரங்கள் மாடலிங் ஆட்கள் பிரபலமில்லாத சாதாரண செலிபிரிட்டி நபர்கள் போட்டியாளர்களாக பங்கேற்று வந்தனர்.

- Advertisement -

இவர்கள் பெரும்பாலும் விஜய் டிவியில் பணிபுரியும் ஊழியர்களின் நட்பு வட்டத்திலிருந்து அல்லது முந்தைய சீசன்களில் கலந்த போட்டியாளர்களுக்கு தெரிந்தவர்களாகவோ நண்பர்களாகவோ இருப்பது வழக்கமாக இருந்தது. இந்த நிலையில் இந்த வருடம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே பிக் பாஸ் காமன் மேன் என்ற ஒரு ஷோவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

இந்த காமன் மேன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து பதிவு செய்தவர்களில் இருந்து சிலர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் பிக்பாஸ் காமன் மேன் ஷோவில் நேரடியாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் முடிவில் அவர்களது பெர்ஃபார்மன்ஸ்ளை பொறுத்து சிலர் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நேரடி போட்டியாளர்களாக கலந்துக்கொள்ள விஜய் டிவி தரப்பில் வாய்ப்பு தரப்படுகிறது.

- Advertisement -

மேலும் பிக்பாஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால் இதற்கு முன்பு தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் இந்தி என ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது. ஆனால் இந்த முறை எல்லா மொழிகளிலும் ஒரே சமயத்தில் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை போலவே பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியையும் நடிகர் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குவாரா என்றால் அதற்கு வாய்ப்பில்லை என்று ஒரு தகவல் கசிந்துள்ளது. எனவே விஜய் சேதுபதிக்கு பதிலாக அந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிக்பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முக்கிய நட்சத்திர நடிகர்கள் யாரேனும் ஒருவர் களத்தில் இறங்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்