- Advertisement -
Homeபொழுதுபோக்குஆப்பு வைக்க தயாரான தேர்தல் ஆணையம்… ஜனநாயகன் படத்துக்கு மீண்டும் ஏற்பட்ட சிக்கல் -...

ஆப்பு வைக்க தயாரான தேர்தல் ஆணையம்… ஜனநாயகன் படத்துக்கு மீண்டும் ஏற்பட்ட சிக்கல் – அப்செட் ஆன விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

ஜனநாயகன் படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து ஏமாற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில் தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. மே மாதம் தேர்தல் என்பது உறுதி. அதனால் ஜனநாயகன் படம் திரைக்கு வருவதில் இப்போது ஒரு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தணிக்கை வாரியம் போலவே இப்போது தேர்தல் ஆணையமும் இந்த படத்துக்கு எதிராக திரும்பும் வாய்ப்புள்ளது. அடுத்த சில மாதங்களில் தமிழ்நாடு கேரளா புதுச்சேரி மேற்கு வங்கம் அஸாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால் ஜனநாயகன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும். தவெக தலைவராக விஜய் வருகிற தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார். அதனால் அவர் நடித்த ஜனநாயகன் படத்தில் ஒரு அரசியல் வசனம் இருந்தால் கூட அது தேர்தல் பிரச்சார படமாக கருதப்படும்.

கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படமான நமோ, நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது.அது தேர்தல் பிரச்சாரமாக மாறக்கூடும் என தேர்தல் ஆணையம் கருதி நமோ படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அதனால் அதே போன்ற ஒரு நிலை ஜனநாயகன் படத்திற்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

மேலும் தேர்தலில் விஜய் போட்டியிடும் போது ஜனநாயகன் படத்தின் பட்ஜெட்டும் தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்றும் ஒரு தகவல் உள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட் ஆன படம் பகவந்த் கேசரி. இதன் தமிழ் ரீமேக் தான் ஜனநாயகன். இதில் விஜய்க்காக சில அரசியல் காட்சிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தெலுங்கில் பகவந்த் கேசரி படத்தில் இல்லாத அரசியல் சார்ந்த காட்சிகளும் வசனங்களும் தமிழில் உருவான ஜனநாயகன் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவே இந்த படத்துக்கு மேலும் சிக்கலாக மாறும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் அந்த அரசியல் காட்சிகள் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகளை விமர்சிப்பதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் ஜனநாயகன் படத்துக்கு இந்திய தேர்தல் ஆணையமும் ஆப்பு வைக்க தயாராகி விட்டது.

- Advertisement -

சற்று முன்