- Advertisement -
Homeபொழுதுபோக்குவரும் பிப்ரவரி 5ம் தேதி ரிலீஸ் ஆகிறதா ஜனநாயகன்? நம்பிக்கை அளித்த தயாரிப்பாளர் - சென்சார்...

வரும் பிப்ரவரி 5ம் தேதி ரிலீஸ் ஆகிறதா ஜனநாயகன்? நம்பிக்கை அளித்த தயாரிப்பாளர் – சென்சார் போர்டு தரப்பில் உரிய பதில் கிடைக்குமா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில் மீண்டும் தனி நீதிபதி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். பட நிறுவனம் சென்சார் போர்டு இருதரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் மீண்டும் கோர்ட் வழக்கு என்று அலைக்கழிக்காமல் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்ளும் ஒரு முடிவுக்கு படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் வந்துவிட்டது. அதனால் இந்த வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு சென்சார் போர்டு சொல்லும் அறிவுறுத்தல்களை பின்பற்றி படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் பல கோடி ரூபாய் விலையாக தந்த நிலையில் தங்களது பணத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனத்திடம் திரும்ப கேட்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அப்படி யாரும் கேட்கவில்லை எனவும் படத்துக்கான முதலில் பேசப்பட்ட விலையை குறைத்துக்கொள்ளவும் தயாரிப்பாரிடம் கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஜனநாயகன் படம் ரிலீஸ் என்கிற ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. ஏனெனில் இந்த வழக்கை திரும்ப பெற்றுக்கொள்கிற பட்சத்தில் சென்சார் போர்டு சில தினங்களில் படத்தை பார்த்துவிட்டு அதில் நீக்க வேண்டிய காட்சிகளை சொன்னால் உடனே நீக்கி விட்டு படத்தை திரைக்கு கொண்டு வர படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

- Advertisement -

வினியோகஸ்தர்களிடம் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அப்படி ஒரு தகவலை கூறியிருப்பதால் வரும் பிப்ரவரி 5ம் தேதி ஜனநாயகன் திரைக்கு வரும் என்று கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உண்மையில் சென்சார் போர்டு முடிவின்படி தான் ஜனநாயகன் படம் திரைக்கு வர முடியும். அவர்கள் தரப்பில்தான் இப்போது குடுமி சிக்கியுள்ளது.

ஏனெனில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவராக இருக்கிறார். பாஜகவின் எதிர்ப்பாளராக தொடர்ந்து தன்னை வெளிப்படுத்தி வருகிறார். அதிமுக பாஜக கூட்டணியில் அவர் சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்கிற பட்சத்தில் மத்திய அரசின் கீழ் இருக்கும் சென்சார் போர்டு ஜனநாயகன் படம் ரிலீஸ்க்கு உடனே சிக்னல் காட்டி விடுமா என்பதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்