- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தின் வசூலை ஜனநாயகன் முறியடிக்குமா? எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டாத தளபதி படம் -...

கருப்பு படத்தின் வசூலை ஜனநாயகன் முறியடிக்குமா? எதிர்பார்த்த அளவுக்கு கல்லா கட்டாத தளபதி படம் – ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்!

- Advertisement -

சென்சார் பிரச்னை காரணமாக 6 மாதங்களாக முடங்கிய ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆன போது, படத்தை பார்த்து விமர்சித்த மூத்த சினிமா பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி, பேசாம பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம் என்று தனது வலைதள பக்கத்தில் கமெண்ட் செய்திருந்தார். அது படம் பார்த்த ரசிகர்களின் மனக்குமுறலாக தான் இருந்தது.

ஏனெனில் தெலுங்கில் பாலகிருஷ்ணா ஸ்ரீலீலா நடித்த பகவந்த் கேசரி படத்தை ரீமேக் செய்துதான் ஜனநாயகன் படத்தை எச் வினோத் எடுத்திருந்தார். ஆனால் தெலுங்கு படத்தையே மேலும் தெலுங்கு படமாக எடுத்து வைத்திருப்பதாக தான் தெலுங்கிங் வெளியான ஜனநாயகன் படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

- Advertisement -

வழக்கமாகவே விஜய் படங்கள் என்றாலே மசாலா படங்கள்தான். அதிலும் ஹீரோயிசம் மட்டுமே படம் முழுவதும் இருக்கும். முதல்வராகும் லட்சியத்தில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் மசாலாவும் அரசியலும் தூக்கலாக இருந்தது ரசிகர்களை விரக்தியடைய செய்துவிட்டது. ஆனாலும் 2 வாரங்களான நிலையில் ஜனநாயகன் படம் 300 கோடி ரூபாய் வசூலை கடந்துவிட்டது.

இப்போது உள்ள சூழ்நிலையில் ஜனநாயகன் படம் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தின் 340 கோடி ரூபாய் வசூலை கடக்குமா என்பதே பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. நடிகர் விஜய் நடித்த சமீபத்திய படங்களில் மிக சுமாரான வசூல் ஜனநாயகன் படம்தான் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக ஏ படம் என்பதால் ஃபேமிலி ஆடியன்ஸ் வருகை இல்லாமல் போய்விட்டது.

- Advertisement -

படம் வெளியான 2 வாரங்களில் 300 கோடி ரூபாய் வசூலை கடந்தாலும் லாபத்தை பார்க்க இன்னும் ரூ. 60 கோடிக்கு மேல் ஷேர் வரவேண்டும் என்ற நிலையில் இந்த படத்திற்கு இன்னும் 100 கோடி ரூபாய் வசூல் என்பது மிகவும் அவசியமாகிறது. கர்நாடகாவில் 30 கோடி ரூபாய்க்கு மேல் ஜனநாயகன் வசூலித்துள்ளது.

அதே போல் கேரளாவில் 16 கோடி ரூபாய் தெலுங்கு மாநிலங்களில் 13 கோடி ரூபாய் இந்தியில் 22 கோடி வெளிநாட்டில் 92 கோடி ரூபாய் என ஜனநாயகன் படம் வசூலித்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் கூறுகின்றன. சூர்யா நடிப்பில் வெளியான கருப்பு படம் 340 கோடி ரூபாய் வசூலைக் கடந்து இந்த ஆண்டின் அதிக வசூல் தமிழ் படங்களில் முதலிடத்தில் உள்ளது. எனவே கருப்பு படத்தின் வசூலை முறியடிக்க இன்னும் 40 கோடி ரூபாய் வசூலை ஜனநாயகன் படம் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்