விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனத்தை தெரிவித்தாலும் அது வசூலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை
பிரசாந்த் பிரபுதேவா என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில் தந்தை விஜய் கதையின் நாயகனாகவும் மகன் விஜய் படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார். இதில் ஜீவா ரோலில் வரும் மகனின் கதாபாத்திரம் மிகவும் சரியாக வடிவமைக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.
குறிப்பாக டிஏஜிங் முறையில் விஜயின் முகத்தை இளைஞர் போல் காட்டி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு கிளைமாக்ஸ் ஒரு முக்கியமான காரணம் என்று கூறலாம். அந்த அளவுக்கு கடைசி அரை மணி நேரத்தை விறுவிறுப்பாக எடுத்திருந்தார் வெங்கட் பிரபு.
மட்ட பாடலுக்கு திரிஷா போடும் குத்தாட்டம், கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் வந்த கேமியோ ரோல், தல என்ற பெயர் இடத்தில் பயன்படுத்தப்பட்ட விதம் என சில விஷயங்கள் சுவாரஸ்யமாக இருந்ததால் கோட் திரைப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இருப்பினும் படத்தில் பாடல்கள் அந்த அளவுக்கு சிறப்பாக இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். குறிப்பாக அந்த ஸ்பார்க் பாடல் தேவையே இல்லை என்றும், அந்தப் பாடலை நீக்கினாலும் பெரிய அளவு பாதிப்பு இருக்காது என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். படம் மூன்று மணி நேரம் இருப்பதால் இந்த கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில் கோட் திரைப்படத்தை netflix நிறுவனம் ஓடிடி யில் திரையிடுகிறது. அதில் இயக்குனர் கட் செய்த காட்சிகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. அதாவது மொத்த திரைப்படமே 3 மணி நேரம் 40 நிமிடங்கள் இருக்கும் என்று சிலர் கூறுகிறார்கள். ஏற்கனவே ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் மற்றும் மோகன் இடையிலான காட்சி நீக்கப்பட்டு விட்டதாகவும் அது விரைவில் வெளியிடப்படும் என்றும் வெங்கட் பிரபு தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அவர் கூறியது போல அந்த காட்சிகள் எல்லாத்தையும் சேர்த்து ஓடிடியில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.





