- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் திரைக்கு வரும் நடிகர் விஜய் சேதுபதியின் மாஸ் ஹிட் படம் - அதிகாரபூர்வ...

மீண்டும் திரைக்கு வரும் நடிகர் விஜய் சேதுபதியின் மாஸ் ஹிட் படம் – அதிகாரபூர்வ ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

- Advertisement -

கடந்த 10 நாட்களாக இணையத்தில் அதிக கவனம் பெற்றவர் நடிகர் விஜய் சேதுபதி தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் தொடர்ந்து 3வது ஆண்டாக நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லீடர்ன்னா என்ன லீடர்ஷிப்புன்னா என்னான்னு தெரியாம என்று ஒரு கருத்தை பேசியிருந்தார். இது வீட்டுக்குள் இருந்த லீடர் குறித்த அவரது கருத்தாக இருந்தாலும் அது விஜய்க்கு தான் என்று தவெகவினர் விஜய் சேதுபதிக்கு எதிராக கொடி பிடிக்க துவங்கியதால் இணையத்தில் பரபரப்பானது.

- Advertisement -

ஆனால் விஜய் டிவி நிர்வாகம், அப்படி ஒரு கோணத்தில் அவர் பேசவில்லை என்று விளக்கம் தந்துவிட்டது. மேலும் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய் சேதுபதியும், நான் தெரிவித்த கருத்துகள் இந்த பிக்பாஸ் வீட்டுக்கும், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கும் எங்களுக்கும் மட்டுமே சொந்தமானது என்றும் பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே விஜய் சேதுபதி நடித்த பத்தா பட விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் அட்லி, வழக்கம் போல விஜய் புகழ் பாடியது மட்டுமின்றி சட்டசபை என்ற பெயர் கூட தெரியாமல் பேசுவது போல் கெத்து காட்டியதற்கு அவரை சில நாட்களாக இணையத்தில் தமிழக மக்களும் ரசிகர்களும் பொள பொள என பொளந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் விஜய் சேதுபதிக்கு பெரிய கவனம் கிடைத்துள்ள நிலையில் அவர் நடித்த ஒரு வெற்றிப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி வெளியான படம் தர்மதுரை. சீனு ராமசாமி இயக்கத்தில் ஆர்கே சுரேஷ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்திருந்தார்.

மேலும் நடிகைகள் தமன்னா சிருஷ்டி டாங்கே ஐஸ்வர்யா ராஜேஷ் ராதிகா சரத்குமார் கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தற்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தர்மதுரை படம் திரைக்கு வருகிறது. வருகிற அக்டோபர் 23ம் தேதி தர்மதுரை படம் ரி ரிலீஸ் செய்யப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்