- Advertisement -
Homeபொழுதுபோக்குபல தடைகளை கடந்து வரும் மே 8ம் தேதி திரைக்கு வருகிறாரா ஜனநாயகன்? - டைட்டிலில்...

பல தடைகளை கடந்து வரும் மே 8ம் தேதி திரைக்கு வருகிறாரா ஜனநாயகன்? – டைட்டிலில் தளபதி பேரை எப்படி போடுவாங்க?

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், 2 ஆண்டுகளுக்கு முன்பு தி கோட் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த போதுதான் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். அப்போதே தி கோட் படத்துக்கு பிறகு ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன். அதற்கு பின் சினிமா நடிப்பில் இருந்து முற்றிலும் விலகி விடுவேன் என்றும் திட்டவட்டமாக கூறியிருந்தார்.

அவர் அப்படி சொல்லி நடித்த படம்தான் எச் வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் படம். இது விஜய் நடிப்பில் உருவான 69வது படமாகவும் இருந்தது. கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படம் 4 மாதங்களாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை. சென்சார் பிரச்னை காரணமாக இந்த படம் முடக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இடையில் தமிழக சட்டசபை தேர்தலும் வந்துவிட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யும் வாய்ப்பும் தடைபட்டு போனது. இப்போது ஓட்டுப்பதிவு நடந்து முடிந்த நிலையில் விரைவில் இந்த படத்தை திரைக்கு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஆனால் இன்னும் படத்தை ஒருமுறை பார்த்து விட்டுதான் சான்றிதழ் தர முடியும் என்று சென்சார் அதிகாரிகள் கூறியதாக ஒரு தகவல் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஏற்கனவே இந்த படம் இணையத்தில் லீக் ஆகி பலர் பார்த்தும் விட்டனர். மேலும் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்த லோக்கல் கேபிள் டிவி உரிமையாளர் ஒருவர், ஜனநாயகன் படத்தை தனது லோக்கல் சேனலில் ஒளிபரப்பிய நிலையில் அவர் கைதும் செய்யப்பட்டார்.

- Advertisement -

எனினும் தளபதி படத்தை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்பதில் அவரது ரசிகர்கள் உறுதியாக இருப்பதால் ஜனநாயகன் படத்தை கொண்டாட அவர்கள் தயாராகி வருகின்றனர். ஏற்கனவே சிவகாசி படமும் ரி ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையே ஜனநாயகன் படம் வரும் மே 8ம் தேதி ரிலீஸ் என ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமோ படத்தின் இயக்குனர் எச் வினோத் தரப்பில் இருந்தோ அறிவிப்பு வெளியானால் தான் அது உண்மையான ரிலீஸ் தேதியாக இருக்க முடியும். ஏனென்றால் படத்துக்கு சென்சார் கிடைக்காமல் அவர்கள் ரிலீஸ் தேதியை உறுதியாக சொல்ல முடியாது. அதே நேரத்தில் மே 4ம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு ஜனநாயகன் வெளியானால், தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் என டைட்டிலில் வருமா என்றும் ரசிகர்கள் தவெக கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்