முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் சிக்மா. இந்த படத்தில் ஹீரோனாக சந்தீப் கிஷன் நடித்திருக்கிறார். கடந்த ஜூலை 31ம் தேதி வெளியாக இருந்த சிக்மா படம், அதற்கு ஒரு வாரம் முன்னதாக விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் ரிலீஸ் காரணமாக சிக்மா படம் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று சிக்மா படம் ரிலீஸ் என அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்சன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற அக்டோபர் 1ம் தேதி இயக்குனர் அட்லி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த பக்தா படம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிப்பில் அவரது மகன் அக்ஷய் குமார் நடித்த ராவடி படமும் அதே நாளில் வெளியாக உள்ளது. சிறை படத்தை தொடர்ந்து அக்ஷய்குமார் நடித்துள்ள 2வது படம் இது. அடுத்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த டிமாண்டி காலனி 3 உட்பட மொத்தம் 7 படங்கள் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் அட்லி நடிகர் விஜயை வைத்து 3 மெகா ஹிட் படங்களை இயக்கியவர். விஜயின் நெருக்கமான நண்பர் என்பதால் அவர் விஜயின் மகன் இயக்கிய சிக்மா படம் ரிலீஸ் நாளில் தனது படத்தை வெளியிடுவதில் சிக்கல் உள்ளது. அதேபோல் விஜய் நடித்த லியோ படத்தை தயாரித்தவர் லலித்குமார். அவரும் விஜய்க்கு நெருக்கமானவர் என்பதால் சிக்மா படம் ரிலீஸ் அன்று தனது மகனின் படத்தை ரிலீஸ் செய்வாரா என்பது கேள்வியாக உள்ளது.
அதேபோல் டிமாண்டி காலனி 3 பட இயக்குனர் அஜய் ஞானமுத்து விஜயின் தீவிர ரசிகர் என்பதால் அவரும் சிக்மா படத்துக்கு போட்டியாக தனது படத்தை வெளியிடுவதில் சிக்கல் நீடிக்கிறது. அத்துடன் டிமாண்டி காலனி 3 படத்தின் தயாரிப்பாளர் பேஷன் ஸ்டுடியோ சுதன் விஜயின் மேனேஜர் ஜெகதீஸ்சின் நெருக்கமான நண்பர் மற்றும் பார்ட்னர் என்பதால் அந்த படமும் வெளியாக வாய்ப்பில்லை.
எனவே முதல் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சிக்மா படம் வெளியாவதால் அக்டோபர் 1ம் தேதி வெளியாக வேண்டிய டிமான்டி காலனி 3 ராவடி பக்தா உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது விஜயின் மீதுள்ள அன்பாகவும் அதே நேரத்தில் விஜய் மகன் இயக்கிய படம் ரிலீஸ் நாளில் தனது படங்கள் போட்டியாக வருவது தேவையில்லாத சிக்கலை தரும் என்ற முன் எச்சரிக்கையாகவும் உள்ளது.





