இயக்குனர் ராம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு இயக்குனராக உள்ளார். அவரது இயக்கத்தில் உருவான கற்றது தமிழ் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஜீவா நாயகனாகவும் அஞ்சலி நாயகியாகவும் நடித்திருந்தார். இதுதான் நடிகை அஞ்சலி அறிமுகமான முதல் படமாகும்.
ஆனந்தி என்ற இந்த கேரக்டர் நடிகை அஞ்சலி நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து இயக்குனர் ராம் தரமணி பேரன்பு பறந்து போ தங்க மீன்கள் போன்ற படங்களை டைரக்ட் செய்திருந்தார். இன்று ராம் இயக்கத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி நடிகர் சூர்யா ஆகியோர் நடித்த ஏழுகடல் ஏழுமலை என்ற படம் ரிலீஸாகி உள்ளது.
நடிகர் ராம் கதையின் நாயகனாக நடித்த படம் சவரக்கத்தி. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வில்லன் கேரக்டரில் டைரக்டர் மிஷ்கின் நடித்திருந்தார். ஒரு சாதாரண சண்டை எப்படி விரோதமாக மாறுகிறது என்ற கதைக்களத்தில் உருவான படமாக இது பாராட்டை பெற்றது.
இந்த நிலையில் இயக்குனர் ராம் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான ஆரம்பகட்ட பணிகளை இப்போது துவங்கியிருக்கிறார். அவரது அடுத்த படத்துக்கு கடவுள் வாழ்த்து என்ற டைட்டில் வைக்கப்பட உள்ளது. இந்த டைட்டில் கேட்டவுடன் ரசிகர்கள் மத்தியில் ஒரு ஆர்வமும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் ராம் திட்டமிட்டுள்ளார். ஆனால் ஏற்கனவே கமிட் ஆன படங்களில் விஷால் நடிக்க வேண்டி இருந்து அவரது கால்ஷீட் கிடைக்காத பட்சத்தில், தனது கடவுள் வாழ்த்து படத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் சசிக்குமாரை நடிக்க வைக்க இயக்குனர் ராம் முடிவு செய்திருக்கிறார்.
கடவுள் வாழ்த்து என்ற படத்தின் டைட்டிலே மிக வித்யாசமாக இருப்பதால் நிச்சயமாக இது ஒரு வேறுபட்ட மாறுபட்ட கதைக்களத்தில் உருவாகும் படமாக தான் இருக்கும். அதில் அதிரடி ஆக்சன் கமர்ஷியல் ஹீரோவான விஷால் நடிப்பதை காட்டிலும் அதில் யதார்த்தமான ஒரு நடிகர் சசிக்குமார் நடித்தால் பெரிய அளவில் அது வரவேற்பை பெறும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.





