- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு அடி மேல் அடி - படம் ரிலீஸ் செய்யும் நேரத்தில்...

ஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு அடி மேல் அடி – படம் ரிலீஸ் செய்யும் நேரத்தில் இப்படி ஒரு சிக்கலா? விஜய் ரசிகர்கள் விரக்தி!

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் ஒருவழியாக திரைக்கு வருகிற சூழல் இப்போது உருவாகியுள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களின் படி தேர்தலுக்கு பிறகுதான் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு மறுநாள் அதாவது 24ம் தேதி சென்சார் தரப்பில் இருந்து ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது.

அப்படி சென்சார் சான்றிதழ் பெறப்படும் பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள வினியோகஸ்தர்களை சென்னைக்கு வரவழைத்து படத்தின் தயாரிப்பின் நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். இதில் வருகிற 30ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என்று முடிவெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

- Advertisement -

ஏற்கனவே ஜனநாயகன் ஜனவரி 9ம் தேதி ரிலீஸ் என்ற போதே, இந்த படம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு சென்சார் செய்யப்பட்டு விட்டது. அதனால் இப்போதைக்கு சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு கண்டென்ட் மட்டும் அனுப்பினால் போதும். ஓவர்சீஸில் படம் ரிலீஸ் செய்வதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆனால் ஜனநாயகன் படத்தை ரூ. 120 கோடிக்கு வாங்கிய அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம், பல மாதங்கள் படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனால் அந்த அக்ரிமென்ட்டை ரத்து செய்துவிட்டது. அதனால் மீண்டும் ஜனநாயகன் படத்தை ஓடிடி வியாபாரம் செய்ய வேண்டிய நெருக்கடி ஜனநாயகன் பட தயாரிப்பாளருக்கு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதே நேரத்தில் அமேசான் பிரைம் 20 சதவீதம் அட்வான்ஸ் கொடுத்திருந்த நிலையில் அதை வட்டியுடன் கேவிஎன் புரடக்சன்ஸ் நிர்வாகிகள், அந்த ஓடிடி தளத்துக்கு திருப்பிச் செலுத்த வேண்டும். இதுவும் அந்த தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை தரும். அத்துடன் இந்த படத்தின் கண்டென்ட் இணையத்தில் லீக் ஆகி விட்டால் எந்த ஓடிடி நிறுவனமும் அதிக விலை கொடுத்து வாங்காது.

இதற்கு முன்பு விஜய் நடித்த தி கோட் படத்தை ஜீ5 ஓடிடி தளம்தான் 93 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அதனால் அங்கு ஜனநாயகன் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விலை பேசப்பட்டு வருகிறது. அவர்கள் தி கோட் படம் விலைக்கே 93 கோடி ரூபாய்க்கு ஜனநாயகன் படத்தையும் வாங்கி கொள்வார்களா? இல்லை இன்னும் விலை குறையுமா என்ற நிலையில் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரிப்பாளர்கள் சிக்கல் மேல் சிக்கலில் தவித்து போயுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்