பான் இந்தியா நட்சத்திர நடிகர் பிரபாஸ் நடித்து கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான படம் தி ராஜா சாப். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 200 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து தோல்வியடைந்தது. இந்த படத்தை தயாரித்த பியூப்பிள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிப்பாளர் டிஜி விஸ்வபிரசாத்திடம் தி ராஜா சாப் படம் தோல்வி குறித்து கேட்கப்பட்டது. அவர் கூறுகையில், நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் படத்தை வெளியிட்டது தான் நாங்கள் செய்த அடிப்படை தவறுகளில் ஒன்று. வேறொரு தேதியில் படம் வெளியாகி இருந்தால் அதன் முடிவு வேறாக இருந்திருக்கும் என்று கூறியிருக்கிறார். தி ராஜா சாப் படம் வெளியான போது சிரஞ்சீவி நயன்தாரா நடித்த மனசங்கர வரப்பிரசாத்காரு படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அந்த சமயத்தில் 5 தெலுங்கு படங்கள் வெளியானது. அதைத்தான் தயாரிப்பாளர் குறிப்பிட்டதாக தெரியவந்துள்ளது.





