- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஆரம்பிச்சு 9 மாதங்கள் ஆச்சு, இன்னும் 17 நாள் படப்பிடிப்பு நடத்தணுமாம், பெரிய...

ஷூட்டிங் ஆரம்பிச்சு 9 மாதங்கள் ஆச்சு, இன்னும் 17 நாள் படப்பிடிப்பு நடத்தணுமாம், பெரிய குண்டாக தூக்கிப் போட்ட தி கோட் படக்குழு – தளபதியை தாறுமாறா கடுப்பேத்தறாங்களே?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் கடந்தாண்டு ஜனவரி 14ம் தேதி வெளியான படம் வாரிசு. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்தருந்தார். நடிகர்கள் பிரபு, சரத்குமார், ஷாம், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, நடிகைகள் ஜெயசுதா, சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பேமிலி சப்ஜெக்ட் படமாக இருந்தது. வசூல் ரீதியாக வாரிசு படம் வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக டிவி சீரியல் என கிண்டல் செய்யப்பட்டது.

அதன்பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லியோ படம் ரிலீஸ் ஆனது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்த இந்த படத்தில் திரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ஒரு காட்சியில் திரிஷா, விஜய்க்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார்.

இந்தி நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், டைரக்டர்கள் மிஷ்கின், கெளதம் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் இரட்டை பிறவி, நரபலி உள்ளிட்ட விஷயங்களை கொண்ட திரைக்கதையாக இருந்ததால் ரசிகர்கள் பலத்த அதிருப்தியடைந்தனர். வசூலில் திருப்தி அளித்தாலும் விமர்சன ரீதியாக இது மிக மோசமான படமாக விஜய்க்கும், டைரக்டர் லோகேஷ் கனகராஜூக்கும் அமைந்தது.

கடந்த ஆண்டில் லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே, அக்டோபர் 2ம் தேதி ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடிக்க துவங்கி விட்டார் நடிகர் விஜய். இந்த படத்தில் விஜய் 3 கேரக்டர்களில் நடித்துள்ளார். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு, சினேகா, மீனாட்சி சௌத்ரி, ரம்யா கிருஷ்ணன், கனிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தி கோட் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்த படம் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், இன்னும் 17 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ளதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி இருப்பது, விஜய் ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் இன்னும் இரண்டரை மாதங்களே உள்ள நிலையில், படத்தில் விஎப்எக்ஸ், டீஏஜிங் தொழில்நுட்ப பணிகளும் நிறைய பாக்கி உள்ளது.

நடிகை சினேகா நடிக்க வேண்டிய ஒரு நாள் படப்பிடிப்பு, அதே போல் மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா போன்ற பிற நடிகர், நடிகைகள் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக 16 நாட்கள் என மொத்தம் 17 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்தால் மட்டுமே தி கோட் படப்பிடிப்பு நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள், இயக்குனர் வெங்கட்பிரபு மீது பயங்கர அதிருப்தியில் உள்ளனர். இரண்டரை மணி நேர படத்தை எடுக்க, 9 மாதமாகியும் இன்னும் படப்பிடிப்பு முடியலையா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்