- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் எந்த நிலையில் இருக்குது தெரியுமா... அடேங்கப்பா ஜெட் ஸ்பீடுல படம்...

மாரி செல்வராஜின் பைசன் திரைப்படம் எந்த நிலையில் இருக்குது தெரியுமா… அடேங்கப்பா ஜெட் ஸ்பீடுல படம் போகுது போலையே…

- Advertisement -

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ். தற்போது பைசன் படத்தை இயக்கி வருகிறார். கர்ணன் திரைப்படத்திற்கு பிறகு அவர் பைசன் படத்தை தான் இயக்குவதாக இருந்தது. இதற்காக விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் தயாராகி வந்தார். இதனை பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் உதயநிதி ஸ்டாலின் தனது இறுதி திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்க ஆசைப்பட்டதால், பைசன் திரைப்படம் தள்ளிப்போனது. இதனைத் தொடர்ந்து, உதயநிதியுடன் இணைந்து அவர் மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். கிடைத்த இடைவேளையில் வாழை திரைப்படத்தையும் அவர் முடித்தார்.

 

இந்த இடைவேளையில் வேறு எந்த திரைப்படத்திலும் கமிட் ஆகாமல், பைசனுக்காக காத்திருந்தார் துருவ். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இதனை படம் எடுத்து வருகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

 

கபடி விளையாட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதில், மனத்தி கணேசன் என்னும் வீரரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுதான் மாரி செல்வராஜ் பைசன் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்கிறார்.

 

பசுபதி, ரஜிஸா விஜயன், கலையரசன், அருவி மதன் உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கு நிவாஸ் பிரசன்னா இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கபடி பயிற்சியில் தீவிரம் காட்டி வந்தார் துருவ் விக்ரம்.

 

இந்த நிலையில் பைசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% முடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் சில நாட்கள் மட்டும்தான் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம் மாரி செல்வராஜ். வரும் இருபதாம் தேதி இதன் மீதமுள்ள படப்பிடிப்பு தொடங்கப்படும் நிலையில், ஜூன் அல்லது ஜூலை மாதம் பைசன் திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

 

சற்று முன்