வசந்த், மணிரத்னம், சீமான், ராஜ்கிரண், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மாரிமுத்து. அதுமட்டுமின்றி பாடலாசிரியர் வைரமுத்துவிடமும் மூன்று வருடங்கள் உதவியாளராக இருந்தார். தொடர்ந்து கடந்த ஆம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர். அதில் பாடல்களும், வடிவேலுவின் காமெடியும் ஹிட்டடித்தன. அதேபோல் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் படம் பெற்றது.
அதனையடுத்து புலிவால் படத்தை இயக்கினார். அந்தப் படம் மலையாள திரைப்படத்தின் ரீமேக்காக இருந்தாலும் மாரிமுத்து தனக்கேயுரிய பாணியில் சில மாற்றங்களை செய்து இயக்கினார். ஆனால் அந்தப் படமும் தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து சினிமாவில் இயங்க வேண்டும் என்று இருந்தவரை மிஷ்கின் யுத்தம் செய் படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படத்தில் அவரது நடிப்பு பலரையும் ஈர்க்க கோலிவுட் அவரை நடிகராக தன்னுள் வைத்துக்கொண்டது. அப்படி அவர் நடித்த பல படங்களில் அசால்ட்டாக ஸ்கோர் செய்திருந்தார். கடைசியாக அவரது நடிப்பில் ஜெயிலர் படம் வெளியானது. மேலும் இந்தியன் 2, கங்குவா படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. சமீப காலமாகத்தான் அவர் அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தார்.
வெள்ளித்திரையில் எப்படி கலக்கினாரோ அதேபோல் சின்னத்திரையிலும் கலக்கினார். அவர் நடித்த ஏதிர்நீச்சல் நாடகம் டிஆர்பியில் நம்பர் 1ஆக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் மாரிமுத்துவும் ஒருவர். அந்த அளவுக்கு ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருந்தார். சூழல் இப்படி இருக்க அந்த சீரியலுக்காக டப்பிங் கொடுத்துக்கொண்டிருந்தபோது உடல்நிலை ஒரு மாதிரி செய்ய தானே காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனையில் அட்மிட் ஆனார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் அவரது ஃபேமிலி பேக்ரவுண்ட் குறித்து பலரும் பேசிவருகிறார்கள். தற்போது அதுகுறித்து தெரியவந்திருக்கிறது. அதாவது சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்பில் அவர் சொகுசு வீடு ஒன்றை கட்டி வந்திருக்கிறார்.அதேபோல் அவரது மகன் அகிலன் Zoho என்ற நிறுவனத்தில் நல்ல பொசிஷனில் இருக்கிறார். மேலும் அவரது மகளும் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கிறாராம். அதனால் வருமானத்துக்கு சிக்கல் இல்லை. அதேபோல் மாரிமுத்துவும் சேமிப்பை வைத்துவிட்டுத்தான் சென்றிருக்கிறாராம்.





